04/07/2018

மாந்திரீகத்தில் ஸ்ரீ காளி...


சித்தி பலன்-  அமோக தைரியம், வாக் வன்மை, முன் கூட்டியறியும் தன்மை , நிகரற்ற செல்வம் , நோயற்ற நீண்ட வாழ்வு, ஞானம் பெறுதல்.

மாந்திரீகத்தில் தசம மகாவித்தை ஒரு பெரிய பங்கு ஏற்கிறது. தசம மகாவித்தையில் பத்து பெண் தெய்வங்கள் பங்கேற்கின்றனர். அந்த பத்து பெண் தெய்வங்களும் மாந்திரீகத்தில் முக்கியமானவர்கள். அவர்களை சித்தி செய்வது என்பது ஒரு தனிக்கலை. தசம மகாவித்தையில் முதலில் பங்கேற்கும் தெய்வம் காளி ஆகும்.
   
காளி என்றதும் எல்லோருக்கும் பயபக்தியுடன் கூடிய உணர்வு ஏற்படும். காளி யோகத்தை தந்திர முறையிலும், மந்திர முறையிலும், உபாசனை முறையிலும், சித்தி செய்யலாம். காளி என்ற வார்த்தைக்கு கருப்பு நிறம் என்று பெயர். காளி காலங்களின் தலைவி ஆகும். காளியை அக்னியின் ஏழு நாவுகளில் ஒன்றாக கூறுவர். காளி எந்திரத்தை வைத்து தந்திர முறையில் சித்தி செய்யலாம்.

யோகினி தந்திரம், காமகய தந்திரம், நிரூத்திர தந்திரம், மகாநிர்வாண தந்திரம் போன்ற தந்திரங்களில் காளியை சித்தி செய்யலாம். காளி நேரம், மரணம், போன்றவைகளுக்கு தெய்வமாகும்.

காளியின் வடிவம் கருத்த உருவம் தீட்சண்ணியமான கண்கள். வெளியே நீண்ட நாக்கு, அவள் சடல் நிலையில் இருக்கும் சிவன் மீது நிற்கிறார். மண்டை ஓட்டை மாலையாக அணிந்துள்ளார். தனது உடலையே சடலங்களாலும், எலும்பாலும் அலங்கரித்துள்ளார். நான்கு கைகள் உண்டு. ஒரு கையில் இரத்தம் சொட்ட சொட்ட தலையை ஏந்தி உள்ளாள். ஒரு கையில் வளைந்த அருவாள் உள்ளது. ஒரு கை நானிருக்கிறேன் பயமேன்? என்று அவயவரம் காட்டுகிறது. மற்றொரு கை எல்லாம் தருகிறேன் என்று உபயவரம் காட்டுகிறது. அவள் ஞான சக்தியின் வடிவம். காளிகாதேவி பயங்கர உருவங்கள் கொண்டிருந்தாலும் நேர்மைக்கு தலை வணங்குபவள். காளியை துதித்தால் தீமைகள் அகலும், வாழ்க்கையில் வெற்றி உருவாகும்.

குண்டலினியின் சக்தியை எழுப்புவதில் காளிக்கு ஒரு தனி பங்கு உண்டு. காளி தாந்திரீக வழிப்பாட்டின் மூலம் குண்டலினியை எழுப்ப முறைகள் உண்டு. இந்த தாந்திரீக முறை மிகப் பேறு போனது.
 
காளியின் முக்கிய தலங்கள்...

1. திருவெண்காடு - சுவேத காளி.
2. அம்பகரத்தூர் - காளி. (காரைக்கால் அருகில்).
3. திருவக்கரை வக்கிர காளி, பாண்டிச்சேரி அருகில்.
4. திருவாச்சூர் மதுர காளி.
5. வெக்காளி அம்மன் - திருச்சி உறையூர்.
6. மடப்புரம் காளி - திருபுவனம்.
7. கல்கத்தா காளி, சென்னை மேற்கு மாம்பலம்.
8. ஸ்ரீ காளிகாம்பாள், சென்னை.
9. வெட்டுடையார் காளியம்மன் கொல்லங்குடி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.