13/07/2018

சென்னையில் ஸ்மார்ட்போன் சார்ஜர் வெடித்ததில் இருவர் பலி...


ஸ்மார்ட்போன் அனைத்து இடங்களுக்கும் அவசியமாய் தேவைப்படுகிறது, ஆனால் அவற்றை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். மேலும் இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்களை நன்கு கவனித்து பயன்படுத்த வேண்டும்

மற்றொரு மொபைல் தொடர்பான சோகம், ஒரு ஸ்மார்ட்போன் வெடித்து சிதறி 90 வயது மனிதர் மற்றும் அவரது 60 வயது மகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் சென்னையில் தம்பரம் போலிஸ் நிலையம் பகுதியில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. டெக்கான் குரோனிக்கில் செய்தியின்படி, ஹபிப் முகம்மது (90) மற்றும் மகள் Muharumisha (60) உள்ளூர் சந்தையில் இருந்து ஒரு ஸ்மார்ட்போன் வாங்கியிருந்தனர்

இந்நிலையில் நேற்று ஸ்மார்ட்போன் சார்ஜர் மூலம் போனை சார்ஜ் போட்டுவிட்டு தூங்கச் சென்றார் என்றுக் கூறப்படுகிறது. தற்செயலாக ஸ்மார்ட்போன் சார்ஜர் வெடித்தில் தீ ஏற்பட்டுள்ளது, பின்பு இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்பரம் போலிஸ் நிலையத்தால் பதிவு செய்யப்பட்ட அறிக்கையின் படி, ஸ்மார்ட்ஃபோன் சார்ஜர் வெடித்து சிதறியபோது தீ ஏற்பட்டது பின்பு இருவரும் உயிரிழந்தனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் அன்மையில் அதிகமாக நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதற்கு முன்பு கிராடில் பண்ட் என்ற நிறுவனத்தின் தலைமை அதிகாரி நஸ்ரின் ஹாஷன் என்பவர் ஹூவாய் மற்றும் பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

நஸ்ரின் ஹாஷன் படுக்கையறையில் சார்ஜ் போட்டுவிட்டு தூங்கச் சென்றார் நஸ்ரின் ஹாஷன்இ அந்த சமயம் ஸ்மார்ட்போன் திடீரென வெடித்து சிதறியது, இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்ப்பட்டு உயிரழந்தார். மேலும் படுக்கையில் அதிகமாக தீப்பற்றி எரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது
உறவினர்கள் :

மேலும் அவரது உறவினர்கள் தெரிவித்தது என்னவென்றால் படுக்கையறையில் ஸ்மார்ட்போன்களை சார்ஜ் போட்டிருந்தார், அது திடீரென வெடித்து அவர் மண்டையில் தாக்கியதால் அவர் உயிரிழந்தார் எனத் தெரிவித்துள்ளனர். பின்பு படுக்கையறை தீப்பிடித்து எரிந்துள்ளது, ஆனால் தீப்பிடிக்கு முன்பே அவர் இறந்துவிட்டதால்இ அவரால் வெளிவர முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் ஸ்மார்ட்போன் வெடித்து காயம் ஏற்பட்டு அதன் காரணமாக தான் உயிரிழந்துள்ளதாக அவரது பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு முழுவதும் சார்ஜ் வேண்டாம் பல ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் போனுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கையேட்டின் உதவி கொண்டு வடிவமைக்கின்றனர். ஆனால் சிலர் பணத்தை சேமிக்க என்று கூறி பேட்டரி அதிகமாக வெப்பம் ஏறினால் சர்க்யூட்டை செயல் இழக்கம் செய்யும் கரளநஐ பொருத்துவதில்லை. எனவே இரவு முழுவதும் சார்ஜில் போனை வைப்பவர்களுக்கு ஆபத்தில் முடியும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.