02/07/2018

மாந்திரீகமும் மனநிலையும்...

         
பொதுவாக மாந்திரீகம் என்ற வார்த்தையே பலருக்கு ஒருவித அச்சமும், வியப்பும் கொடுப்பதாக அமைகிறது. பலர் மாந்திரீகத்தின் மூலமாக எதிரிகளை அழிக்கவேண்டும் என்று அலைவார்கள். அவ்வாறு செய்வதற்கு பதிலாக எதிரிகளை திருந்தி ஒற்றுமையாக்க வாய்ப்புக் கொடுக்கலாம். செய்தார்க்கு செய்தவினை என்பார்கள்.

நாம் ஒருவருக்கு மாந்திரீகத்தின் மூலம் தீமை செய்தால் அந்த வினை உங்களுக்கு நிச்சியமாக துன்பத்தைக் கொடுக்கும். பலர் மாந்திரீக சக்திக்காக பயப்படுவது கண்டுள்ளோம்.

உண்மையில் தன்னம்பிக்கையுடன், நேர்மையுடன் தெய்வ சங்கல்ப்பத்துடன் வாழ்பவர்களுக்கு மாந்திரீகம் எந்த ஒரு தீமையான பலனையும் செய்யாது.

மாந்திரீகத்தின் மூலம் எந்த ஒரு காரியத்தையும் செயல்படுத்த முயற்சி செய்யும் குடும்பங்கள் அவ்வளவு செழிப்பாகவும், சீராகவும் இருக்காது.

நன்மையைச் செய்து நன்மையை பெறுங்கள். எனக்குத் தெரிந்த ஒரு காவல்துறைக்காரர் ஒருவர் உண்டு. அவர் மாந்திரீகத்தில் அதிக நாட்டமும், நம்பிக்கையும் உள்ளவர். அவர் அவரின் வாழ்நாள் முழுவதையும் தான் மாந்திரீகத்தால் பாதிக்கப்பட்டவராக எண்ணி தன் பணத்தை பலவாறு மந்திரவாதிகளுக்குதான் சாகும்வரை செலவு செய்து வந்தார். இதனால் அவர் மனநிலையும் கூட ஓரளவு பாதிப்புக்கு உட்பட்டு இருந்தது.

இதைப்போல நீங்களும் இத்தகைய மன பாதிப்புக்கு உட்படாமல் இருங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.