03/08/2018

சிலுவை யுத்தங்கள் − 13...


முதலாவது சிலுவைப் போர் (ஹி.491 − ௧ி.பி.1097) − 3...

௧டந்தப் பதிவில் பார்த்த அந்த நிகழ்வைப் பற்றி வரலாற்றாசிாியர் இப்னு கல்தூன் தனது நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

பைதுல் முகத்தஸைக் கைப்பற்றிய பிரஞ்சுக்காரா்கள் கூட அப்பிரதேசத்தை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.அதிகமான முஸ்லிம்களைக் கொன்றனர். பள்ளி வாயில்களில் தஞ்சம் புகுந்திருந்த இமாம்கள், உலமாக்கள், தொழுகையாளிகள், நல்லடியார்கள் ஆகியோர்களும் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு பலி எடுக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் எழுபதாயிரத்தை விடவும் அதிகமாக இருந்தது.

இந்த உண்மையை சிலுவை வீரா்களின் வரலாற்றாசிரியர்கள் கூட மறைக்கவில்லை. பைதுல் முகத்தஸ் பிரதேசத்திற்குள் சிலுவை வீரா்கள் நுழைந்த பின்,அப்பிரதேசம் கண்ட பயங்கர கொலைச் சம்பவத்தை வில்யம் சூரி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

"கொலையுண்ட முஸ்லிம்களின் இரத்தப் பெருக்கினால் உருவான பெரிய கொலைக்களம் சிலுவை வீரா்களிடையே பயத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியது."

இன்னுமொரு சிலுவை யுத்த வரலாற்றாசிரியரான Wells என்பவர் அந்த நிகழ்வைப் பின்வருமாறு விவரிக்கிறார்...

"அந்த கொடூரமான கொலைகள் நடந்த அன்று,நான் அத்தூய பிரதேசத்துக்குச் சென்றபோது,சிலுவை வீரா்களால் மேற்கொள்ளப்பட்ட அப்பாதக நடவடிக்கைகளினால் நகரினுள் புகுவது மிகவும் கஷ்டமாக இருந்தது. ஏனென்றால், கொலை செய்யப்பட்டவர்களின் இரத்தம் முழங்கால் அளவு பெருகியிருந்தது" என்று குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு பைதுல் முகத்தஸைக் கைப்பற்றியது சிலுவை வீரா்களின் நடவடிக்கையில் முக்கிய வெற்றியாகக் கணிக்கப்பட்டது. அதனால்,
இக்காட்டுமிராண்டிகள் தமது சொந்தப் பிரதேசங்களுக்குச் சென்ற போது கோலாகலமாக விழா எடுத்து வரவேற்கப்பட்டனா். திரும்பிச் சென்ற சிலுவை வீரா்கள் சொன்ன சம்பவக் கதைகள் அப்பிரதேச சுதேசிகளை கிழக்குப் பிரதேசம் நோக்கி இன்னொரு படை நடத்திச் செல்லத் தூண்டியது. என்றாலும்,சிரியாப் பிரதேசத்தில் பைதுல் முகத்தஸ், அன்தாகியா, திரிப்போலி, ரஹா ஆகிய நான்கு பிரதேசங்களிலும் சிலுவை அரசுகள் உருவாக்கப்பட்டதோடு யுத்தத் தீ அணைந்திருந்தது.

- தொடரும்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.