05/08/2018

தமிழ் மக்களும் குதிரை வீரர்களும்...



ஜமாலுதீன்.. ஜக்கியூதீன்..  கடைசி பாகம்...

ஜமாலுதீன் ஜக்கியுதீன் என்ற இரண்டு பேரை பற்றி போன பதிவில் பார்த்தோம் அதன் மீதத்தை இப்போது பார்ப்போம்.

ஜமாலுதீன் ஒரு பகுதி தலைவராக மட்டுமில்லாமல் போர் வீரனாகவும் இருந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது அப்படியே இருக்கட்டும்.

பாண்டி நாட்டு கடற்கரையில் இருந்து எதிரேயுள்ள ஈழத்தில் தமிழர் தளபதிகள் காலிங்கராயர் சோழகங்கன் என்ற இரண்டு படை தளபதிகளை.

சிங்கள அரசன் புவனேக பாகு என்பவர் இரண்டு தளபதிகளையும் துரத்திவிட்டு ஈழத்தை தம் வசம் கொண்டு வந்தார் புவனேக பாகு. .

இந்த தகவல் மாறவர்ம பாண்டிய அரசனுக்கு தெரிவிக்கப்பட்டது.

உடனே பாண்டிய நாட்டில் இருந்து ஈழத்தை நோக்கி ஒரு படை கிளம்பியது அந்த படைக்கு

தளபதி ஜமாலுதீன். .

இந்த படை ஈழம் சேர்வதற்கு முன் புவனேகு பாகு என்ற சிங்கள அரசன் இறந்துவிடுகிறார்.

ஈழத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது பசியும் பட்டினியும் நிலவியுள்ள நேரத்தில் ஜமாலுதீன் படைகள் ஈழத்தை கைப்பற்றியது.

ஜமாலுதீன் ஈழத்தில் உள்ள சுபகிரி கோட்டையை கைப்பற்றி அங்கு புத்தரின் பல்லை பாதுகாத்து வந்தார்கள் .

அந்த பல்லை எடுத்துக்கோண்டு போரில் கிடைத்த வெற்றி செல்வங்களுடன்

பாண்டியனின் அரசவையில் கொண்டு வந்து கொட்டினார்.

தாமரை மலர் போன்று சிரித்துக் வரவேற்றார் என்று வரலாறு கூறுகிறது.

இதோடு நாம தொடர்ந்து பார்த்து வந்த ராவுத்தர்கள் வரலாறு முடிகிறது.

இதை பதிவிட காரணம் ?
மதநல்லிணக்கம்.

இப்படி தான் ஒரு புத்தகம் உள்ளது. தமிழுக்கு தொண்டு செய்த கிருஸ்தவ பெரியார்கள் என்று..

தமிழும் இஸுலாமும் என்று
மா சோ வி எழுதிய புத்தகமும் உண்டு..

நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இந்த புத்தகங்களை அக்கால அரசியல் நாட்டுடமையாக்கியது ..

மணவை முஸ்தபா என்ற தமிழ் அறிஞர் மருத்துவ தமிழ் அகராதி என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

அதுவு‌ம் குறைந்தது  2,000 பக்கங்கள் கொண்ட அந்த புத்தகம் தான் ஆங்கில ரோம வார்தைகளை பயன்படுத்தி வரும் மருத்து வரலாற்றில் முதல் முறையாக தமிழில் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளார்..

ஆனால் கண்டுக்கொள்ளத்தான் ஆட்கள் இல்லை.

பெராசிட்டமால்
இஞ்சக்சன்
ஆப்பரேஷன்
தைராய்டு
கிட்னி
ஹார்ட் அட்டாக்

இப்படி எல்லாமும் ஆங்கிலம்..

மாத்திரை மருந்து உட்பட எல்லாவற்றையும் தமிழில் தொகுப்பது எவ்வளவு கடினமான வேலை.

மாத்திரை மருந்துகள் மட்டுமல்லாது உடலில் உள்ள சுரப்பிகளை யும் தமிழில் எழுதியுள்ளார். .

வாயில நுழையாத பெயரை கூறும் மருத்துவர்களையும் அதை பெருமையாக பேசும் நபர்களுக்கும் செருப்படி இந்த ஆய்வு புத்தகங்கள்..

ஆனால் அதை நடைமுறைப்படுத்த இங்கு மானமுள்ள ஆட்சி நடக்கவில்லையே..

ஆகவே நான் கூற விரும்புவது மத நல்லிணக்கம் என்ற மறுபெயருக்கு உதாரணம் நமது தமிழகம் தான்.

களப்பிரர்களுக்கு கடவுள்
கொள்கை வேறு,

நாகர்களுக்கு கடவுள் கொள்கை வேறு..

மராட்டியர்களுக்கு கடவுள் கொள்கை வேறு..

ஆனால் எல்லாவற்றையும் அள்ளி அணைத்து கொண்டது தமிழகம்.

திடீரென்று மத வெறி அரசியல் செய்யும்
பாஜக. அதன் குட்டி கலவர இயக்கங்களுக்கு இங்கு வேலை இல்லை. ...

அவர்களில் உள்ள சிலருக்கு இப்பதிவு. ..

புகைப்படம்: முதன்முறையாக தமிழில் அச்சடிக்கப்பட்ட விவிலியம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.