30/08/2018

கோவையில் அடகு வைத்த நகைக்குப் பதிலாக போலி நகைகளை கொடுத்த வங்கி நிர்வாகம் : வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி...


ஆவாரம்பாளையத்தில் அடகு வைத்த நகையை மீட்கச் சென்ற வாடிக்கையாளருக்கு வங்கி நிர்வாகத்தினர் போலி நகையைக் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆவாரம்பாளையத்தில் சைக்கிள் கடை நடத்தி வரும் கணேசன் என்பவர் 190 கிராம் எடைகொண்ட தங்க நகைகளை அங்குள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் ரூ. 3 லட்சத்து 10 ஆயிரத்துக்கு அடமானம் வைத்துள்ளார். இந்த நிலையில், நீண்ட நாட்களாக வட்டி செலுத்தாத நிலையில், நகை ஏலம் விடும் நிலை வந்துள்ளது. இதையொட்டி, நகையை மீட்டு மீண்டும் அடமானம் வைக்க கணேசன் வங்கிக்கு சென்றுள்ளார்.

அசல் மற்றும் வட்டியைச் சேர்த்து ரூ. 3 லட்சத்து 60 ஆயிரத்தை செலுத்தி நகையை அவர் மீட்டுள்ளார். அப்போது, வங்கி அதிகாரிகள் தன்னிடம் கொடுத்த நகை போலியானது என்பதை உணர்ந்த கணேசன் அதிர்ச்சியடைந்தார். பின்னர், இது தொடர்பாக, வங்கி நிர்வாகத்தினரிடம் முறையிட்டுள்ளார். அப்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கி நிர்வாகம் சார்பில் உறுதியளிக்கப்பட்டது.

இந்த சம்பவங்களை பார்த்துக் கொண்டிருந்த சக வாடிக்கையாளர்களுக்கும் தங்களது நகைகள் மீது சந்தேகத்துடன் கூடிய அச்சம் ஏற்பட்டது. இதனால், வங்கியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, வங்கி தரப்பிலிருந்து நகைக்கு எதுவும் ஆகாது என உறுதி அளித்ததையடுத்து, வாடிக்கையாளர்கள் கலைந்து சென்றனர்.

இந்தப் போலி நகை விவகாரத்தில் வங்கியின் நகை மதிப்பீட்டாளராகப் பணியாற்றி வந்த கார்த்திக் என்பவரை பீளமேடு போலிசார் தேடி வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.