12/09/2018

ஆந்திராவில் சோழர் கால நடுகல் - தமிழர் வீரம் சொல்லும் சாசனம்...


Chola Hero Stone found in Andhra Pradesh...

சென்னையில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில், ஆந்திரப்பகுதியில் பண்டையத் தமிழ் எழுத்துக்கள் கொண்ட சோழர்கால நாடுகல்லினை ஆந்திரா தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர் .

சித்தூர் மாவட்டம் காளஹஸ்தி அருகே, வரலாற்று ஆர்வலர் அளித்த தகவலின் பேரில், மத்தியத் தொல்லியல் துறையினர் கள ஆய்வைனை மேற்கொண்டனர்.

அங்கு, ஐந்தடி உயரமும், நான்கடி அகலமும், கொண்ட நடுகல்லில், ஒருவீரன் வாள் மற்றும் கேடயம் ஏந்தி போர்செய்வது போல சோழர்காலத் தமிழ் எழுத்துக்களோடு கண்டு பிடுத்துள்ளனர். ஆண்டு பற்றி எந்தத் தகவலும் இல்லாதநிலையில், எழுத்து மற்றும் சிற்ப அமைதியைக் கொண்டு அது 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கணக்கிட்டுள்ளனர்.

கல்வெட்டுபடி , சித்தன், பெரும்பீமன் எனும் இரண்டு வீரர்கள் நினைவாக எழுப்பப்பட்டாகக் கல்லாக தெரிகிறது. இந்த இரண்டு சோழ வீரர்கள் அழகன் கருப்பாருடையார் எனும் குறுநில மன்னனின் கோட்டையை காக்க, வீரமுடன் போரிட்டு பலரை கொன்று குவித்ததாக கல்வெட்டு குறிப்பிடுகிறது.

அப்போரில் இறந்த அவ்வீரர்களின்
நினவாக, கருப்பாருடையார் நடுகல் எழுப்பி, வாகவேடு எனும் பகுதியில் நிலதானங்கள் அளித்தது பற்றி இந்த பத்தாம் நூற்றாண்டு கல்வெட்டு கூறுகிறது.

இத்தமிழ் கல்வெட்டு, ஆந்திரப் பகுதியில் எல்லைப்புற போர்களில், நம் வீரத்தை வெளிப்படுத்தியதன் சான்றாக அமைந்துள்ளது .

ஹெரிட்டேஜர் தமிழ் மரபுசார் இதழ்

ASI discovers 9th Century Hero Stone with Tamil Inscriptions in Andhra Pradesh

http://timesofindia.indiatimes.com/articleshow/65747775.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.