23/09/2018

ராயப்பேட்டை மருத்துவமனையின் அவலம்..


சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சை வார்டு பகுதியில் உள்ள கழிப்பிடத்தின் கதவுகள் உடைந்து சுமார் ஆறு மாத காலமாக இந்த நிலையில்தான் காணப்படுகிறது.

மேலும் இந்த வார்டில் உள்ள மின் விசிறிகளும் செயல்படாமல் இருக்கின்றது இதை மருத்துவ நிர்வாகத்திடம் கேட்டால் அவர்கள் நாங்கள் மருத்துவமனையின் பராமரிப்பு அதிகாரியிடம் கூறி விட்டோம் அவர்கள் செயல்படுத்தவில்லை ஆகவே நாங்கள் என்ன செய்வது என்று மருத்துவ செவிலியர்கள் மற்றும் பணிபுரியும் துப்புரவாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் இந்த எலும்பு சிகிச்சை பகுதியில் கரப்பான் பூச்சிகளின் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது இதனால் உணவுகளில் அசுத்தம் ஏற்படுகிறது இந்த குறைகளின் காரணமாக சிகிச்சைக்காக வந்திருக்கும் நோயாளிகளும் நோயாளியை பாதுகாக்கும் உறவினர்களும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்...

நமக்கு இன்பாக்சில் வந்தது... நடவடிக்கை எடுக்கப்படும் வரை ஷேர் செய்யுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.