23/09/2018

பாம்பும் மகுடியும்...


இந்தியர்கள் ஓராயிரம் ஆண்டுகளாக  பாம்புகளை வணங்கிவருகிறார்கள்.

இந்தியா முழுவதும் ஆங்காங்கே வாழும் பாம்பாட்டிகள் ஒரு குறுப்பிட்ட ராகத்தை மகுடியில் வாசிக்கும்போது புற்றிலிருந்து நாகங்கள் வெளிவருகின்றன.

அப்போது அது முற்றிலுமாக அந்த ராகத்தினால் தன் நச்சுத்தன்மையை இழக்கின்றன.

பின்பு மகுடியின் ராகத்திற்கு தகுந்த மாதிரி நடனமாடுகின்றது.

முதன்முறையாக இந்தியா வந்த பிரிட்டிஷார் இதை பார்த்து திகைத்தனர்.

அவர்கள் அறிவியல் அறிஞர்களை
கேட்டபோது பாம்புகளுக்கு நிச்சயம் காதுகள் கிடையாது எனவும்..

கேட்பதற்குண்டான செவிப்பறை கிடையாது எனவும்..

உடலியல் ரீதியாக இதை திட்டவட்டமாக அறிஞர்கள் மறுத்தனர்..

ஆனால் பாம்புகள் இசையை கேட்கின்றன.

அதோடு இசைக்கேற்ப நடனமாடவும் செய்கின்றன.

ஒரு பாம்பு அல்ல எல்லா பாம்புகளும் இசைக்காக நடனமாடுகின்றன. காதில்லாமலே..

இங்கிலாந்துக்கு அறிக்கை அனுப்பினர்.

எப்படி காதில்லாமலே இசையை பாம்புகள் உணர்கின்றன. அதோடு புரிந்து கொண்டு அதன்படி
நடக்கின்றன என.. ஆங்கில அறிஞர்கள் குழப்பமடைந்தனர்.

இது ஏதோ இந்தியாவில் ஒரு மூலையில் மட்டும் நடக்கின்ற செயலன்று. இந்தியா முழுமைக்கும் இது எப்படி சாத்தியமாகின்றது.

இந்தியர்கள் இளவேனிர்காலம் ஆரம்பித்தவுடன் பாம்புகளுக்கு திருவிழாக்களை ஆரம்பிக்கின்றனர்.

பூக்களின் நறுமனம் சில்லென்ற காற்று பச்சைபோர்த்திய அழகுடன் கூடிய மாதத்தில் பாம்புகளுக்கென்று ஒரு நாளை ஒதுக்குகின்றனர்.

அந்த நாளில் பாம்புகளை கொல்ல மாட்டார்கள். பாம்புகளை தெய்வீகமாக வணங்கி பாலை ஊற்றி வணங்கி மகிழ்கின்றனர்.

ஒரு இடத்தில் கூடி பாம்பு நடனத்தை கண்டு ரசிக்கின்றனர்.

இறுதியாக ஆராய்ச்சியாளர்கள் ஒருமுடிவிற்கு வந்தனர்.

பாம்புகளுக்கு காதுகள் கிடையாது. ஆனால் உடலிலுள்ள மொத்த
தோலுமே இசையை உணர்கின்றது என்று.

தோல்களில் இசை அலைகள் பட்டவுடன் அவை நெளிகின்றன ரசிக்கின்றன பின்பு நடனமும் ஆடுகின்றன.

காதால் கேட்கவில்லை என்றாலும் உடல் முழுமைக்கும் அது கேட்க ஆரம்பிக்கின்றன.

பாம்புகளுக்கு காதில்லை அது கேட்பதில்லை என்பது முட்டாள்தனமானது.

மனிதனுக்கு சிறிய காது மட்டுமே உண்டு. சிறிதளவே அவனால் கேட்க முடியும்.

ஆனால் பாம்புகளுக்கு உடலே காதாக உள்ளது. இன்னும் சொல்லப் போனால் காதுக்குள் தான் பாம்புகளுக்கு உடலே உள்ளது.

பாம்புகள் புற்றை விட்டு வெளியே வருவது ஆபத்து என அவைகளுக்கு தெரியும்.

நஞ்சில்லாமல் வெளிவருவது ஆபத்து என அவைகளுக்கு தெரியும்.

மக்கள் மத்தியில் நடனமாடுவது ஆபத்து என அவைகளுக்கு தெரியும்.

ஆனால் இசையை கேட்டவுடன் பயமற்று போகின்றன.

பயமில்லாமல் போவதால் நஞ்சு அதற்கு தேவையில்லாமல் போகிறது.

அது தன்னை யாரும் கொல்ல
மாட்டார்கள் என நம்பிக்கை கொள்கிறது.

சந்தைப் பகுதிகளில் பாம்பை வைத்து வித்தை காட்டுவது மோசமானதாகும்.

பாம்புகளுக்கு பயம் தொற்றிக் கொள்ளும் தருணம் மனிதனை தாக்க ஆரம்பித்து விடும்.

அப்படி தான் பிரபஞ்சமும்...

அதற்கு கைகளோ/ கால்களோ மற்ற அவையங்களோ கிடையாது.

ஆனால் மொத்த பிரபஞ்சமே கடவுள் தன்மையால் நிரம்பியுள்ளது.

இந்த பிரபஞ்சத்திற்கு இணக்கமாக போனால் கடவுளோடு இணங்குவதாக அர்த்தம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.