04/09/2018

பைக்கை பறிமுதல் செய்யததால் போலீசார் கண்முன்னே தீக்குளிக்க முயன்ற வாலிபர்...


தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஹெல்மெட் அணியாமல் வரும் பைக் ஓட்டிகள் மீது காவலாளர்கல் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன்படி, நேற்றும் ஞாயிற்றுக்கிழமை என்று பாராமல் தூத்துக்குடி மாவட்டம், வி.வி.டி.சிக்னல் பகுதியில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவரை போலீசார் மடக்கினர்.

அவர் மதுபானம் குடித்துவிட்டு பைக் ஓட்டிவந்ததால் அந்த இளைஞர் மீது, "குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக'' வழக்குப்பதிந்தனர். அதனைத் தொடர்ந்து அவரது பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர் என்ன செய்வதென்று தெரியாமல், 'எனது பைக்கை திருப்பிக் கொடுங்கள்' என்று போலீசாரிடம் கெஞ்சி கேட்டுள்ளார். அதற்கு போலீசாரோ, "கோர்டில் அபராதத்தை கட்டிவிட்டு பைக்கை எடுத்துக் கொள்" என்று கண்டிப்பாக கூறிவிட்டனர்.

போதையில் இருந்த அந்த இளைஞர் அங்கிருந்து சென்றுவிட்டார். காவலாளர்களும் தங்களது வாகனச் சோதனையை தொடர்ந்தனர். சிறிது நேரத்தில் அந்த இளைஞர் மீண்டும் போலீசார் இருக்கும் இடத்திற்கு கையில் பெட்ரோல் பாட்டிலுடன் வந்தார்.

போலீசார் முன்னிலையில் தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு, "எனது பைக்கை தராவிட்டால் தீக்குளித்து விடுவேன்" என்று தீக்குச்சியை பற்ற வைக்க முற்பட்டார். அப்போது அங்கு இருந்த போலீசார் உடனே ஓடிச்சென்று அந்த இளைஞரி தீக்குளிக்க விடாமல் தடுத்தனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.