04/09/2018

புத்தரின் தத்துவங்களுக்கு எழுத்து வடிவம் தந்தது தமிழ்...


புத்தர் கிமு 500 வாக்கில் வாழ்ந்தவர். 45 ஆண்டு காலம் தன் போதனைகளை பாலி மொழியில் பேசினார். எழுத்து வடிவம் இல்லாததால், அவர் போதனைகளை சூத்திரமாக அவரின் சீடர்கள் மனப்பாடம் செய்து வந்தனர். புத்தர் இறந்தபின் அவர்கள் ஒன்றுகூடி தான் மனப்பாடம் செய்த சூத்திரங்களை தொகுத்தனர்..

அந்த புத்தரின் சூத்திரங்களே விநயபிடகம், அபிதம்ம பிடகம், சூத்திரபிடகம் எனும் திரிபிடகங்கள் ஆகும்.

சுமார் 400 ஆண்டு காலம் எழுத்துவடிவம் இல்லாமல் மனப்பாடம் செய்யப்பட்ட அந்த சூத்திரங்களை இலங்கையில் பரப்பியபோது தமிழி எழுத்து வடிவத்தை பயன்படுத்தி, மாத்தளை எனும் ஊரில் கிமு 80 ஆம் ஆண்டு முதன்முதலாக எழுத்து வடிவத்தில் எழுதினர்.

மொழி பாலியிலும் எழுத்தோ தமிழியிலும் அமைந்த அந்த சூத்திரங்களே முதல்முதலாக புத்த தத்துவங்களான திரி பிடகங்களுக்கு எழுத்து வடிவம் தந்து உயிர் கொடுத்ததாகும்.

புத்தரின் தத்துவங்களுக்கு எழுத்து வடிவம் தந்தது நம் தமிழே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.