28/09/2018

மீளாத் துயரை தந்துவிட்டு போன திலீபன்...


தன் சொந்தத் தம்பி போலவே திலீபனைக் கருதினார் பிரபாகரன். அண்ணனின் போராட்டத்துக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருந்தார் திலீபன்.

இந்திய அமைதிப் படைக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கும் முடிவை திலீபன் தயக்கத்தோடு பிரபாகரனிடம் சொன்னபோது, 'நான் ஆயுதப் போராட்டத்துக்குதான் உங்களை எல்லாம் உருவாக்கியிருக்கிறேனே தவிர, உண்ணாவிரதம் இருக்க அல்ல’ என மறுத்திருக்கிறார் பிரபாகரன்.

இதை விட்டால் நமது கொள்கைகளின் தீவிரத்தை நிரூபிக்க வேறு வழி இல்லை. ஈழ மக்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நாம் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்கவில்லை என்பதையும், எங்கள் மண்ணில் இன்னொரு இராணுவம் நிலைகொள்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதையும் அழுத்தமாகச் சொல்லவேண்டிய தருணம் இது. அதை இந்தியாவின் மொழியிலேயே சொல்ல வேண்டும் என்றால், உண்ணாவிரதம்தான் ஒரே வழி’ என வலியுறுத்தி, பிரபாகரனிடம் ஒப்புதல் பெற்றார் திலீபன்.

ஆனாலும், கடைசி நிமிஷத்துலகூட திலீபன் மனசை மாத்திரலாம்னு நம்பினார் பிரபாகரன். உண்ணாவிரதத்துக்கு முந்தைய இரவு திலீபனை விருந்துக்குக் கூப்பிட்டார் பிரபாகரன். அவரோடு சாப்பிட்டுக்கிட்டே, உண்ணாவிரத முடிவைக் கைவிடச் சொல்லிப் பேசிப் பார்த்தார். திலீபன் எதுக்கும் மசியலை.

விருந்து முடிந்து கிளம்பும்போது திலீபன் பிரபாகரனிடம் இப்படிச் சொன்னாராம்... 'அண்ணா... நான் சும்மா வேடிக்கைக்காகவோ, கவனஈர்ப்புக்காகவோ உண்ணாவிரதம் இருக்கப்போவது இல்லை. உங்களோடு பேசிய பிறகு தண்ணீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருக்கலாம் என முடிவு எடுத்திருக்கிறேன்!’ - இப்படி தன் முடிவை இன்னும் கடுமையாக்கி உண்ணாவிரதப் பந்தலில் அமர்ந்தார் திலீபன். எட்டாவது நாளே நினைவு தப்பிருச்சு.

புலிகள் தலைவர் பிரபாகரன், இந்திய அரசுக்கு ஒரு கோரிக்கை வைத்தார். 'நீங்கள் நேரடியாக உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து திலீபனிடம் மக்கள் முன்னிலையில் உங்கள் வாக்குறுதிகளைக் கொடுங்கள். நாங்கள் உண்ணாவிரதத்தை விலக்கிக்கொள்கிறோம்’ என்று.

ஆனால், கடைசி வரை இந்திய அதிகாரிகள் வாக்குறுதி எதையும் அளிக்காமல், ஈழத்து காந்தியை சாகவிட்டனர். அன்னைக்கு முழுக்க உணவு அருந்தாமல் இருந்த பிரபாகரன், வாழ்க்கையில் கண்ணீர்விட்டு அழுதது அந்த ஒரு நாள்தான். அந்தக் கண்ணீர்... திலீபனுக்காக...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.