20/10/2018

1971-ல் கடலுக்குள் இருந்து கிளம்பிய யூஎப்ஓக்கள்...


1952-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி அமெரிக்காவின் அட்லாண்டிக் கடலோர பகுதியில் இருக்கும் நியூ ஜெர்சியில் அடையாளம் கண்டுபிடிக்கப்பட முடியாத பறக்கும் பொருள் (Unidentified flying object - UFO) ஒன்றின் தெளிவான புகைப்படம் சிக்கியது. 1940 மற்றும் 1950-களில் விசித்திரமான இந்த பறக்கும் பொருள்கள் - பறக்கும் சாசர் (Flying Saucer) அல்லது பறக்கும் டிஸ்க் (Fluying Disc) என்ற பொது பெயரில் உலா வந்தது. அவைகளை "அங்கு பார்த்தேன்", "இங்கு பார்த்தேன்" என்று கூறப்பட்டு வந்த நிலையில் தெளிவாக புகைப்படத்தில் சிக்கிய அடுத்த ஆண்டே, அதாவது 1953-ஆம் ஆண்டு அந்த விசித்திரமான பறக்கும் பொருளுக்கு யூஎப்ஓ (UFO) என்று அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டு பின் அவைகள் பூமி கிரகத்தை சேர்ந்த பொருள் அல்ல என்ற நம்பிக்கை பரவியது..

விண்ணில் தோன்றும் யூஎப்ஓக்கள் வழக்கத்திற்கு மாறாக 1971-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கடலில் இருந்து கிளம்பின, மேலும் அவைகள் தெளிவான முறையில் புகைப்படங்களிலும் சிக்கின.

உலகை உலுக்கிய அந்த புகைப்படங்களை அமெரிக்காவின் தாக்குதல் நீர்மூழ்கி கப்பலான யூஎஸ்எஸ் ட்ரேபாங்க் எஸ்எஸ்என்-674 (USS Trepang SSN-674) பதிவு செய்தது.

வெளியான புகைப்படங்கள் அமெரிக்க கடற்படை படைகளுக்கும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு "நெருக்கமான சந்திப்பு" ஆர்க்டிக் பெருங்கடலின் நிகழ்ந்துள்ளது என்பதை உறுதி படுத்துகின்றன.

இந்த புகைப்படங்கள் 'டாப் சீக்ரெட் மேகசின்' (Top Secret Magazine) என்னும் இதழின் பக்கங்களில் இருந்து ஸ்கேன் செய்து பெறப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு ஏவுகணையை உருவம் கொண்ட அந்த மர்ம பொருள் ஆனது கடலுக்குள் இருந்து வெளியே வருவதை உணர்த்துகிறது

இது பறக்கும் பொருளா..?? கடலுக்குள் நுழைகிறதா அல்லது கடலுக்குள் இருந்து வெளியேறுகிறதா என்பதை பற்றிய ஆய்வு இதன் ஒரிஜினல் புகைப்படங்களை கொண்டு அமெரிக்க ராணுவ ஆய்வகத்தில் ஆராயப்பட்டுக் கொண்டு வருகிறதாம்.

முக்கோண வடிவ யுஎப்ஒ ஒன்று பதிவானது அது கடலில் மூழ்குவதற்கு முன்னதாக பக்கவாட்டாக செல்வது போல பதிவாகியுள்ளது.

மற்றொரு யூஎப்ஓ ஆனது பாதிப்புக்கு உள்ளானது போலவும் அதில் இருந்து புகை வெளியேறுவது போலவும் பதிவாகியுள்ளது

இவை அனைத்துமே தாக்குதல் நீர்மூழ்கியின் அனலாக் கேமிராவின் (analog camera) மூலம் பதிவாக்கப்பட்டுள்ளது.

இது சார்ந்த அதிகாரப்பூர்வமான தகவலோ அல்லது பதிவாக்கபட்ட யூஏப்ஓ-க்களின் ஒரிஜினல் புகைப்படங்களோ இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.