20/10/2018

பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பான தகவல்களை பாகிஸ்தானுக்கு கசிய விட்டதாக இந்திய ராணுவ வீரர் ஒருவர் புதனன்று கைது செய்யப்பட்டுள்ளார்...


உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் காஞ்சன் சிங். மீரட்டில் உள்ள ராணுவத்தின் சிக்னல் படைப்பிரிவில் 10 வருடங்கள் பணிபுரிந்து வந்தார். ஆனால் கடந்த மூன்று மாதங்களாக இவரின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து அவர் உளவுத்துறையின் கண்காணிப்பில் இருந்து வந்தார்.

குறிப்பாக பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவுப்பிரிவுடன் "இரகசியமான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த  தகவல்களை" அவர் பகிர்ந்து கொண்டதாக விசாரணையில் கிடைத்த ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் காஞ்சன் சிங் புதனன்று காலையில் கைது செய்யப்பட்டதை உறுதி செய்ததாக உத்தரபிரதேச போலீஸ்  தெரிவித்துள்ளது.

முன்னதாக இதுபோல ஒரு குற்றச்சாட்டின் காரணமாக மஹாரஷ்ஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் பிரமோஸ் ஏவுகணை ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய என்ஜீனியர் நிஷாந்த் அகர்வால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.