20/10/2018

பாவம் - புண்ணியம்...


நல்வினை தீவினை என்று இருவகையால் சொல்லப்படும் கருவினில் தோன்றி வினைப்பயன் விளையுங்காளை, உயிர்களுக்கு மாபேரின்பமும், கவலையும் காட்டும்

- மணிமேகலை

ஊழின் பெருவளி யாவுள மற்றொன்று
சூழினும் தான் முந்துறும்  - திருக்குறள்

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர், நாழி (படி) முகவாது நானாழி - தோழி, நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம் விதியின் பயனே பயன்.

அடுத்து முயன்றாலும் ஆகும் நாளன்றி எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த உருவத்தால் நீண்ட உயர் மரங்கள் பருவத்தாலன்றி பழா
                                                                                            - மூதுரை

பரிகாரத்தின் கதி என்னவாகும்?

மேற்படி ஞானிகள் ஊழ்வினைப் படியே உலக மக்கள் வாழ்க்கை நிர்ணயிக்கப் பட்டுள்ளதை கூறியிருக்கும் பொழுது பரிகாரத்தின் மூலம் தவிர்த்துக் கொள்ள முயல்வது மூட நம்பிக்கையாகும்.

கடவுளின் மீது அன்பு செலுத்துங்கள்.  "அன்பே சிவம்" அவன் தங்களின் ஐம்புலன் அறிவைக் கொண்டு மனதின் மூலம் மனிதனை வழி நடத்துக்கின்றான்.  ஆகையால் அறிவும் மனமும் நம் உடன்பிறந்த தெய்வமாகும் என்று உணர வேண்டும்.  மற்றவை குருமுகம் அறிதல்.

உண்மை, உயிர், அறிவு, கடவுள் ஒருவன் இருக்கின்றான்.  அவனை சிந்தித்து ஆன்ம லாபமடைய மக்களுக்கு உதவுங்கள்.  அறிவான கடவுள் மனிததேகத்தில் விஞ்ஞானி ரூபத்தில் வெளிப்பட்டு மக்கள் முன்னேற புதுயுகத்தை படைத்துக் கொண்டு இருக்கின்றான் என்பதை உணர்த்த வேண்டுகிறோம்.

ஆகவே செய்திதாள்களும், சின்ன திரை, பெரிய திரைகளில் வரும் கற்பனை காட்சிகளில் நம் நாட்டு பாமர மக்கள் அறியாமையிலும், மூடநம்பிக்கையிலும் அழுந்திவிடாமல் விழிப்புணர்வு செய்திகளும், படங்களும் வெளியிட்டால் நம் தமிழ்த்தாய் பெற்ற செம்மொழிக்கு அரியாசனம் அமைத்து கொடுத்த முழுமையான பங்கு தங்கள் அன்பு உள்ளங்களைத்தான் சாரும்.

எந்த புராணக்கதையாக இருப்பினும் கதை முடிவில் அந்தக் கதையில் உண்மை கருத்தை, தத்துவத்தை கூறி முடிப்பது நலம், விளக்கவில்லை எனில் "கலையுரைத்த கற்பனையே நிலை எனக் கொண்டாடும் கண்மூடிப் பழக்கம்தான் வளரும்" என்று உணர்கிறோம்.

எல்லாம் வல்ல பரம் பொருள் நம் இதயத்தின் உள்ளேயே சோதியாக உள்ளது.  அதை அகக்கண்ணால் அறியலாம்.  இவ்வுலக உயிர்களாகிய நாம் ஒரு சூரியன், சந்திரன் கீழ்தான் உயிர் வாழ்கின்றோம்.  இதிலிருந்து நாம் உணர வேண்டியது என்னவெனில், நாம் எல்லோரும் சகோதரர்கள்.  ஆன்ம நேயத்துடனும், மனித நேயத்துடனும் ஒரு ஒளி சோதியின் கீழ் வாழ்வதை உணர்ந்து அனைவரும் அன்பாய் வாழ்ந்திடுவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.