10/11/2018

திருச்செந்தூர் சன்னதி தெருவில் 12 கால் மண்டபத்தில் மேற்கூரை அதிகாலையில் திடீரென இடித்து விழுந்தது...


திருச்செந்தூர் சன்னதி தெருவில் 12 கால் மண்டபத்தில் மேற்கூரை அதிகாலையில் திடீரென இடித்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் யாரும் இல்லாததால் அசம்பாதவிதம் தவிர்க்கப்பட்டது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிக்கு பிரதான நுழைவு வாயிலாக சன்னதி தெரு உள்ளது. இந்த சன்னதி தெருவில் பழமையான மண்டபங்கள் உள்ளது. இரு புறமும் தூண்களாலும், மேற்கூரை ஆஸ்பெட்டாஷ் சீட்டாலும் ஆனது. சன்னதி தெருவின் தூண்டுகை விநாயகர் பின்புறம் உள்ள முகப்பில் செங்குந்தர் 12 கால் மண்டபம் உள்ளது. கடந்த இரு நாட்களாக திருச்செந்தூர் பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந்த மழையில் சன்னதி தெரு செங்குந்தர் 12 கால் மண்டப்பத்தின் மேற்பகுதி பலமிழந்து மேற்கூரை திடீரென நேற்று அதிகாலை 3.30 மணிக்கு இடிந்து விழுந்தது.

அப்போது அந்த பகுதியில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இன்னும் இந்த மண்டபத்தின் மேல்பகுதி கீறல் விழுந்து அபாய கட்டத்தில் உள்ளது. அப்பகுதியில் யாரும் நுழையாதவாறு கயிறால் கட்டப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.