10/11/2018

ஏதேன் தோட்டம் எங்கே..?


விவிலியத்தில் ஏதேன் தோட்டம்...

ஏதேன் தோட்டம் மனிதனுக்கு இறைவன் கொடுத்த முதல் தங்குமிடம்; அங்கு அவர்களுக்கு அனைத்தும் கிடைத்தது; அது மண்ணக சொர்க்கம்; இறைவன் மனிதனோடு வாழ்ந்த இடம்.

ஏதேன் தோட்டம் - ஏதேன் தோட்டத்தில் எல்லாவகையான உயிரினங்களும் மரங்களும் கொடிகளும் இருந்தன. அங்கு தான் இறைவன் முதல் மனிதனான ஆதாமை மண்ணிலிருந்து உருவாக்குகிறார்; அவனிலிருந்து பெண்ணை உருவாக்குகிறார். அங்கே மிக முக்கியமான இரு மரங்கள் இருந்தன.

நல்லது தீயது அறியும் மரம்
வாழ்வின் மரம்.


நல்லது தீயது அறியும் மரத்தின் கனியை உண்ணக்கூடாது என "எல்" கூறியிருந்தார். எல் என்றால் இறைவன்; ஆனால் பாம்பு ஏவாளை ஏமாற்றியது; இறைவனை போல ஆகலாம் என ஆசை வார்த்தை காட்டியது; அவள் அந்த மரத்தின் கனியை உண்டாள்; அவளது துணைவனான ஆதாமுக்கும் கொடுத்தாள் அவனும் உண்டான்.

மனிதனின் கீழ்படியாமையை கண்ட இறைவன் அவர்களை ஏதேன் தோட்டத்திலிருந்து விரட்டி விட்டார்.

மனிதன் மீண்டும் வந்து வாழ்வின் மரத்தில் கைவைத்துவிட கூடாது என்பதற்காக , இரு சேராபீம்களை காவலுக்கு வைத்தார்; சேராபீம் வானதூதர்களில் ஒரு வகையினர்.

விவிலியத்திற்கு முன்பு...

இக்கதை ஏதோ கிறித்தவருக்கோ, யூதருக்கோ , இசுலாமியருக்கோ சொந்தமான கதை அல்ல. இவை இவற்றிகெல்லாம் முந்தையது; சுமேரியாவில் இதை போன்ற ஒரு கதை உள்ளது; ஒவ்வொரு சமூகமும் இச்செவி வழிக்கதையை தங்களது வாழ்க்கையோடு பொருத்து திரித்துக் கொண்டனர்.

உண்மையில் இது என்னவாக இருக்கும்?

மெய்யியல் - உடலியல் பாதை இதற்கு பதில் தரும்.


மறுபடியும் விவிலியம்..

தொடக்கத்தில் ஏதேன் தோட்டத்தில் மனிதனோடு இருந்த இறைவன்; இசுராயேல் மக்களின் வரலாற்றில், பின் உடன்படிக்கை பேழையில் வழியாக உடன் இருந்தார்.


ஆண்டவருடன் பேசும்படி மோசே சந்திப்புக் கூடாரத்தினுள் சென்றார். இரு கெருபுகளிடையே உடன்படிக்கை பேழையின் மேலிருந்த இரக்கத்தின் அரியணையிலிருந்து பேசிய குரலை அவர் கேட்டார்; ஆண்டவர் அவருடன் பேசினார்.

எண்ணிக்கை 7:89.

கெருபு தான் சேராபீம். இந்த உடன்படிக்கை பேழை படத்தை பாருங்க.

உடன்படிக்கை பேழை.

சரி. எப்படியோ இரு வானதூதர்களுக்கு இடையில தான் இறைவன் மறைந்திருக்கிறார்.

இந்த கெருபு (அ) சேராபீம் (அ) வானதூதர் இவற்றை போன்றே எகிப்துல ஒன்று உள்ளது அதுதான் ஆமென் கொம்பு, கிப்போகம்பசு.

ஆமென் கொம்பு..

கிப்போகம்பசு என்பது என்பது நமது தலையில் இருக்கும் ஒரு உறுப்பு.

படத்தை பாருங்க இரு சேராபீம், ஆமென் கொம்பு தெரியுதா என..

இதற்கு நடுவுல என்ன இருக்கு ? எப்படி அதில் இறைவன் பேசுவார் ?

இந்த இரு சேராபீம்களும் தான் ஏதேன் தோட்டத்தை , வாழ்வின் மரத்தை பாதுகாக்குறாங்க.

அது தான் பீனியல் சுரப்பி என்ற மூன்றாம் கண்..

மூன்றாம் கண்... மூன்றாம் கண்ணை திறப்பதின் வாயிலாக நாம் பிரபஞ்ச நினைவுடன் தொடர்பு கொள்ள முடியும் ; அது  தான் இறைவன்; இது வரை உலகம் அனுபவித்த அனைத்தும் அந்த நினைவில் தான் உள்ளது. அதில் நாம் இணைந்தால் அந்த முழு அறிவும் நமக்கு சொந்தமாகும்.


வாழ்வின் மரத்தை அடைவதன் வாயிலாக மரணமில்லாமல் வாழலாம்.

நமது நாட்டில் இது போன்ற நிறுவன மாக்கபட்ட தத்துவங்கள் சமண மதத்தால் தான் வந்தன.

பழங்குடிகளில் இது இயல்பாக காணப்படும் அறிவு; ஒவ்வொரு குழுவிலும் ஒருவர் இறைவனோடு பேசுபவர் இருப்பார்.

பழங்குடிகள் வாழ்வியலுக்கு பின் திணிக்கபட்ட மதங்கள் அந்த இறைவனோட பேசுபரின் இடத்தை பிடித்தன; அப்பழங்குடிகளுக்கு துரோகம் செய்தனர். 300 பருத்தி வீரர்கள் படத்தில் இதை பற்றி காணலாம்.

அதோடு இலுமினாட்டிகள் ஒரே உலக மதத்தின் கருவாகவும் இதை போன்ற மெய்யியல் கருத்துக்கள் தான் இருக்க போகின்றன...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.