06/11/2018

தீபாவளிக்கு ரூ.700 கோடி மது விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா தெரிவித்துள்ளார்...


நாளை கொண்டாடப்பட இருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்களின் தீபஒளி திருநாள் வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார்.

அதில், தமிழக மக்களின் வாழ்வை ஒளிமயமாக்க உழைப்பதற்கு உறுதி ஏற்க வேண்டும்..

ஒளிகள் சிந்தும் உவப்பான திருவிழாவான தீப ஒளித் திருநாளைக் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த தீப ஒளித் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தீபஒளித் திருநாள் என்றாலே மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் தான் நினைவுக்கு வரும். மகிழ்ச்சியையும்,  கொண்டாட்டங்களையும் நினைத்து மட்டும் தான் பார்க்க முடியுமோ? எனும் அளவுக்கு தமிழகத்தின் நிலைமை உள்ளது. தமிழ்நாட்டில் தீப ஒளித் திருநாளுக்கு ரூ.700 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ரூ.1,500 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தவிர எந்த முன்னேற்றமும் தமிழகத்தில் ஏற்படவில்லை. வறுமை வாட்டுவதும், வேலையில்லாத் திண்டாட்டம் இளைஞர்களை துரத்துவதும் வாடிக்கையானதாகி விட்டன.

தீப ஒளி என்பது ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் கொண்டாடப்படுவதாக இருக்கக் கூடாது. தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் தீப ஒளியால் நிறைந்து ஒளிமயமாகத் திகழ வேண்டும். அதற்கு அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னேற வேண்டும். அத்தகைய இலக்கை நோக்கி உழைக்க தமிழக மக்கள் அனைவரும் ஒளி நிறைந்த இந்த நன்னாளில் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு மருத்துவர் அய்யா தெரிவித்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.