இந்த ஓவியம் - 1595 இல் வென்ச்சுரா சில்லிம்பெனியத்தால் வரையப்பட்ட நற்கருணை ஓவியம். இது இத்தாலியில் புளோரன்ஸ் என்ற நகரத்தில் உள்ளது. பரிசுத்த இயேசு, கடவுள் மற்றும் பரிசுத்த ஆவியானவர் இருக்கும் திரித்துவ ஓவியம்.
ஆனால் இந்த ஓவியத்தில் சதித்திட்ட கோட்பாட்டாளர்கள், வேற்றுகிரக கோட்பாட்டை அவர்கள் கண்டிருக்கிறார்கள், அவர்கள் இந்த ஓவியத்தில் இருவருக்கிடையே இருக்கும் கோளப்பொருளானது, பரிசுத்தமான கடவுள் எதிர்கால தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வந்ததை காட்டுகிறதாக கூறுகின்றனர்.
சோவியத் யூனியன் 4 அக்டோபர் 1957 அன்று ஸ்க்ருட்னிக் ஒரு நீள்வட்ட குறைந்த பூமி கோளப்பாதைக்குள் நுழைந்த முதல் புவி செயற்கைக்கோள் என்பது நமக்கு தெரியும்.
"ஸ்டீவ் மேரா" என்பவர் புலனாய்வு அசோசியேஷன் (MAPIT) என்ற அமைப்பின் தலைவராக உள்ளார், இது இங்கிலாந்தின் மிகப்பெரிய அமானுட அமைப்புகளாகும்.
அவர் ஒரு மாநாட்டில் கலந்து கொண்டார், அவர் இந்த ஓவியம் பற்றிய தன் கோட்பாட்டை விளக்கினார். அவர் கூறினார்: "நாங்கள் வேற்றுகிரக பறக்கும் பொருள், உயிரினங்கள் நிகழ்வுடன் இணைந்த பல மதக் கருத்துக்களை கண்டுபிடிக்கத் தொடங்கியுள்ளோம்.
இந்த ஓவியம் (நற்கருணை) என்ற அடிப்படையில் வரையப்பட்டது. அதில் உள்ள கோளப்பொருள் பூமி சுற்றுவதற்கு அனுப்பிய முதல் செயற்கைகோளாக இருந்த ஸ்பூட்னிக்கினைப் பார்க்கும் வரை, அது ஒரு ஓவியம் என்று தான் அறிந்திருந்தனர். உண்மையிலேயே மிகவும் சுவாரஸ்யமான விசயம் என்னவென்றால், ஓவியத்தில் உள்ள கோளப்பொருள். அப்படியே ஸ்பூட்னிக் செயற்கைகோளை வியக்கத்தக்க வகையில் ஒத்திருக்கிறது என்பது தான். அங்கே உள்ள சிறிய கோடுகளும் அப்படியே ஒத்துப்போகிறது.
ஓவியம் வரைந்தபோது, ஸ்பூட்னிக் குறித்து எந்தவித அறிவும் அப்போது இருந்திருக்க வாய்ப்பில்லை.
அவர் மேலும் கூறினார்: "அநேக மக்கள் வேற்றுகிரக நிகழ்வுகளை பற்றி முன்னோக்கியே வந்துள்ளனர், மேலும் அவர்களுடனான தொடர்பு. அவர்கள் அடிக்கடி வருகிறார்கள் அல்லது வருங்கால நிகழ்வுகள் பற்றி தெரிவிப்பதாக கூறுகின்றனர்.
மேலும் இது ஒரு வித்தியாசமான தற்செயலானதா, இருக்கவும் வாய்ப்பில்லை, ஏன் என்றால்? ஓவியம் நிச்சயமாக இயந்திரமயமாக்கல் காலமான 1800 களில் வரையப்படவில்லை"
ஸ்டீவ் மேரா அவர்கள் பல யோசனைகளை காற்றில் மிதக்க விடுகிறார்.
அவர் தண்ணீரைக் திராட்சை ரசமாக மாற்றி, தண்ணீரில் நடமாடி, இறந்தவர்களையும் உயிர்தெழ செய்ய முடிந்தால், அவர் ஏன் காலத்தை கடந்து பயணிப்பவராக இருக்க முடியாது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.