17/11/2018

புத்தியின் வகைகள்...


1. மண் புத்தி : (மிருத்து புத்தி) - மண் சுவரில் ஆணி அடித்தால் உடனே எடுத்து விடலாம். அது போல கேட்ட விசயங்களை உடனே விட்டு விடுவான்.

2. மரபுத்தி : (தாருபுத்தி) - ஆனி சுலபமாக இறங்கும். ஆனால் சுலபமாக எடுக்க முடியாது. அதுபோல கேட்ட நல்ல விசயங்களை வெளியே விடாத புத்தி.

3. கல்புத்தி : (சிலாபுத்தி) - வரிசையாகத் துளையிட்டு முதல் துளையில் உளியால் அடித்தால் கல்  பிளக்கும். அதுபோல சொன்னால்  முழுமையாகப் புரிந்து கொள்ளக்கூடிய புத்தி.

4. மூங்கில் புத்தி : (வேணு புத்தி) - மூங்கில் கணுவின் ஒரு பக்கம் அடித்தால் மறு பக்கம் பிளந்து விடும். அது போல ஒரு விசயத்தைக் கேட்டவுடன் பின் விளைவுகளைப் புரியும்புத்தி.

5. எண்ணெய் புத்தி : (தைலபுத்தி) - தண்ணீரில் ஒருதுளி எண்ணெய் விட்டால் அது எல்லா இடத்திலும் பரவி விடும். ஒரு விஷயத்தை லேசாகச் சொன்னாலும் விபரமாகப் புரிந்து கொள்ளும்  புத்தி.

உலகில் ஏழு வகை மனிதர்கள் இருக்கிறார்கள்...

1.பயந்த குணம் உள்ளவர்கள்.
2.சஞ்சலப் படுபவர்கள்.
3.சதா கற்பனையில் மிதந்து எதார்த்தத்தைக் கோட்டை விடுபவர்கள்.
4.தனிமை உணர்வு மிக்கவர்கள்.
5.மற்றவர்களின் செல்வாக்குக்கோ, சொல்லுக்கோ உடன் படமறுப்பவர்கள்.
6.எதிலும் பற்றற்றவர்கள்.
7.மற்றவர்களின் கவலைகளைத் தம் கவலைகளாக எடுத்தப் போட்டுக் கொண்டு செயல் ஆற்றுபவர்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.