17/11/2018

ஆன்டிமேடர் ஒரு பார்வை...


இந்த ஆன்டிமேடர் என்பது தான் என்ன இது எங்கே இருக்கிறது? இதன் குணங்கள் என்ன?

இவைகள் பெயரில் உள்ளது போலவே இவைகள் சாதா matter க்கு ஆதாவது நாம் காணும் சாதாரண பொருளுக்கு நேர் எதிரானது . எந்த வகையில்?
சாதாரண பொருட்கள் எல்லாமே அணுக்களால் ஆனது. இந்த எதிர் பொருட்களும் கூட தான்.... ஆனால் சார்ஜில் நேர் எதிரானது... நமது உலகில் நாம் காணும் பொருட்கள் அனைத்துமே.. நடுவில் புரோட்டன ஐ சுற்றி எலக்ட்ரான்கள் சுற்றி வருவது காண்கிறோம் ஆனால் அந்த எதிர் பொருளில் நடுவில் இருப்பது எதிர் புரோட்டான் ...அதை சுற்றிவருவது பாசிட்ரான்... அதாவது எலக்ட்ரான் ஐ ஒத்த நேர் மின் சுமை கொண்ட ஒன்று.

இவைகள் எங்கே உள்ளன ?

பிக் பாங்கின் போது சரியாக பாதி மேட்டர் பாதி ஆன்டி மேட்டர் என்று இருந்ததாக சொல்கிறார்கள் அவைகள் எல்லாம் எங்கே போய் ஒளிந்தன என்பது தான் தெரிய வில்லை.

இதில் இந்த இருவரும் ஜென்ம விரோதிகள் ஒன்றை ஒன்று சந்தித்து கொண்டால் மகா சக்தியோடு வெடித்து சிதற கூடியவவைகள்.. அதிலும் இவைகளிடம் மோதினால் 100 matter க்குக் ஒன்னு தான் தப்பும் . அப்படி தப்பி பிழைத்த மீதி தான் இந்த மொத்த பிரபஞ்சம்.

பிரபஞ்சம் ஏன் matter ஆல் ஆனது aantimatter ஆல் ஏன் இல்லை என்பது யாருக்கும் தெரியாது.

இந்த எதிர் பொருட்கள் நமது பொருட்கள் போலவே கிராவிட்டிக்கு கட்டு படுகின்றன.

ஒரு கிராம் ஆண்டிமேட்டர் விலை லட்சம் கோடியை தாண்டும்.

காரணம் இவைகள் பக்கா எனர்ஜி சோர்ஸ்கள் ஆகும்.

ஐன்ஸ்டைன் சொன்ன படி பொருளை ஆற்றலாக மாற்றும் நுட்பம் தான் சூரியனில் மற்றும் அணு உலைகளில் நடக்கிறது ஆனால் அது கூட வெறும் 7 இருந்து 10 சதம் தான் ஆற்றல் மாற்றதை செய்கின்றது.

ஆனால் ஒரு ஆண்டிமெட்டர் கொண்டு 100 சதம் பொருளை ஆற்றலாக மாற்ற முடியும்.

ஒரே ஒரு மணல் துகள் அளவு ஆண்டிமேட்டர் ஹிரோஷிமா போல சில மடங்கு அதிக சக்தியுடன் வெடிக்கும்..
எனவே இதன் அபரிபிதமான ஆற்றலை வின்வெளி பயணம் செல்லும் வண்டிகளில் பயன் படுத்த முடியும்.
ஒரு கிராமில் லட்சத்தில் ஒரு பங்கு எடுத்து அதை தோட்டா முனையில் நிரப்பி தோட்டா வை மிசைல் போல பயன்படுத்த முடியும்....

சில கிலோ ஆண்டிமேட்டர்  கொண்டு மொத்த கிரகத்தை காலி பண்ண முடியும்.

"Tunguska event " எனும் இது வரை விளக்க முடியாத மர்ம வெடிப்பு ஒரு ஆன்டி மேட்டர் சோதனை தான் என்று பலர் நம்புகிறார்கள்.

இது எங்கே இருக்கும் இதை உண்டு பண்ண முடியுமா..?

சாதாரண வாழை பழத்தில் பொட்டாசியத்தின் ஐசொடோப் உள்ளதால் இது 75 நிமிடத்திற்கு ஒரு பாசிட்ரானை  உண்டு பண்ணுகிறது..
அவ்வளவு ஏன் நமது உடல் கூட இதை வெளியிடுகிறது..

மழை பெய்யும் போது கூட இவைகள் பூமியை அடைகின்றன...

ஆனால் இவைகள் எல்லாம் உடனே அழிந்து விடும் ஆபத்து அற்ற துகள்கள்.

CERN ஆய்வகத்தில் ஆன்டிமேட்டர் நிமிடத்திற்கு சில ஆயிரம் உண்டு பண்ண முடிகிறது ஆனால் அப்படியும் அது ஒரு கிராம் எடையை எட்ட சில ஆயிரம் ஆண்டுகள் பிடிக்கும் என்கிறார்கள்.

துளி அளவு எவ்வளவு சக்தி கொண்டது என்று சொன்னேன்...

இது வரை  மனிதன் உண்டு பண்ண மொத்த ஆன்டிமெட்டர் ஒரு கிளாஸ் நீரை சுட வைக்கும் அளவு தான் என்றால் எவ்வளவு உற்பத்தி குறைவு என்று யோசித்து கொள்ளுங்கள்.

ஒரே ஒரு கிராம் எதிர்பொருள் உண்டு பண்ண.. லட்சம் கோடி கிலோ வாட் ஆற்றலும் பல லட்சம் கோடி ரூபாய் செலவும் பிடிக்கிறது.

அப்படி உண்டு பண்ணினாலும் நமக்கு இருக்கும் பெரிய பிரச்சனை இதை எதில் சேமித்து வைப்பது...

சாதாரண பொருளுடன் தொடர்பில் வந்தால் தான் இது தீபாவளி கொண்டாடி விடுமே...

அதற்கென சிறப்பு காந்த விசை ட்ரேப் கள் தேவை... அதை உண்டு பண்ணும் செலவும் கணக்கில் சேர்த்து கொள்ளுங்கள்.

ஆன்டிமேட்டர் மருத்துவத்தில் உதவ கூடியது.

இவற்றின் பயன்பாடை மனிதன் உணர இன்னும் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்..

இப்போதைக்கு antimatter என்ற பெயரில் ஒரு ஹாலிவூட் படம் இருக்கிறது அதை பார்த்து ரசியுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.