இங்கு நம் முன் வைக்கப்படும் அரசியல் தான் சிறந்தது என்று நம் மனம் எவ்வாறு ஏற்றுக்கொள்கிறது...
ஒவ்வொரு அரசியல்வாதியும் தன் கீழ் உள்ள உறுப்பினர்கள் தனித்து சிந்தித்து செயல்படகூடாது என்பதில் தெளிவாக தான் இருக்கிறார்கள்...
நாம் தான் அதனை புரிந்து கொள்ளாமல் ஒவ்வொருவரும் தனித்தனி கட்சிகளின் சிந்தனைகளில் மூழ்கிவிட்டோம்...
சிறந்த அரசியல் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப்பெற வேண்டும்...ஆனால் இங்கு சூழல் அவ்வாறு கட்டமைக்கப்படவில்லை...
கட்சி தலைவன் கைசுழன்ற பக்கம் எல்லாம் கலவரம் செய்யும் அடியாட்களாகவே நீயும் நானும்...
கட்சி சார்ந்த கருத்தியலை விதைக்காமல் மக்கள் நலன் சார்ந்த கருத்தியலை எவன் ஒருவன் விதைக்கிறானோ அவனே தலைவன் என்ற சொல்லாடலுக்கு தகுதியானவன்...
அப்படி இருந்தவர் ஒருவரே ,ஈழத்து அண்ணை மேதகு.வே.பிரபாகரன்... அவரை அடுத்து இதுவரை மக்கள் நலன் சார்ந்த கருத்தியலை விதைக்க எவரும் முற்றபடவில்லை...
(அவருக்கு பின் எந்த ஒரு அரசியல்வாதியும் ஈழத்தில் மக்களை ஒருமித்த கருத்தியலில் ஒருங்கிணைக்கவில்லை...)
மாறாக அவரின் கொள்கைகளை திருடி,அவரின் உருவ பட்ததை வைத்தே இங்கு பிழைப்பு நடத்தும் கட்சிகளின் எண்ணிக்கை மட்டுமே அதிகரித்த வண்ணம் உள்ளன...
அரசியல் என்றுமே மக்களை கருத்தியலால் ஒன்றிணைய விடாது...
நாம் தான் ஒருமித்த கருத்தியலில் ஒன்றிணைய வேண்டும்...
இன்றைய இளையதலைமுறைதான் எதிர்கால அரசாங்கம்...
நாம் இன்று ஒருமித்த கருத்தியலில் ஒன்றிணைந்தால் எதிர்கால தலைமுறைக்கான விடியலை விதைத்து செல்லலாம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.