10/12/2018

பார்வையைப் பறிக்கும் ஒளி உமிழும் இருமுனையம்...


கண் பார்வையைப் பறிக்கும் ஒளி உமிழும் இருமுனையம் விளக்குகள் -ஸ்பெயின் ஆராய்ச்சியாளர்கள் தகவல்...

தற்போது மிக அதிகமாக பயன்படுத்திவரும் ஒளி உமிழும் இருமுனையம் (Light emitting diode) விளக்குகளால் மனிதர்களின் கண் பார்வைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பல ஆண்டுகளாக விலை குறைவான குண்டு பல்புகளைத்தான் மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால், இவை வெப்பத்தை அதிகளவில் உமிழ்வதாகவும், மின்சாரத்தை அதிகளவில் உறிஞ்சுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக ஒளி உமிழும் இருமுனையம் (Light emitting diode) எனப்படும், ‘ஒளி உமிழும் இருமுனையம்’ விளக்குகள் அறிமுகம் ஆனது.

இவை குண்டு பல்புகள் பயன்படுத்தும் மின்சாரத்தில் 5ல் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்துவதாகவும், சுற்றுச்சூழலுக்கு மிக சிறப்பானது என்றும் கூறப்பட்டது. இதனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது. இந்தியாவில் 2009ம் ஆண்டில் 100 வாட்கள் குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், கைப்பேசி, தொலைக்காட்சி என்று பல்வேறு மின்னணு சாதனங்களில் எல்இடி பயன்பாடு அதிகரித்துவிட்டது. தற்போது மக்களிடம் ஒளி உமிழும் இருமுனையம் பல்புகளை பற்றி, மின்சாதன நிறுவனங்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றன...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.