10/12/2018

விசாரணை வருமா? சலுகையில் கிடைத்த வீட்டை விற்ற ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள்.. விலை வேறுபாடு குறித்து விசாரணை வருமா?


நெற்குன்றம் திட்டத்தில், சலுகை விலையில், வீட்டுவசதி வாரியம் வழங்கிய வீட்டை, 15 ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அதிக விலைக்கு விற்றது தெரிய வந்துள்ளது. சிலர் விதிகளை மீறி, வணிக நிறுவனத்திற்கு விற்றுள்ளதும், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சலுகை, வீடு, ஐ.ஏ.எஸ்.,  ஐ.பி.எஸ்., அதிகாரிகள்,  விலை வேறுபாடு, விசாரணை...

ஒதுக்கீடுதமிழக அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு, நெற்குன்றத்தில், சலுகை விலையில், 1,016 வீடுகள் கட்ட, 17 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப் பட்டது. அதில், 445 கோடி ரூபாயில், குடியிருப்புகள் கட்டப்பட்டன.

இதில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு, 608 வீடுகள் ஒதுக்கப்பட்டன.இவர்களுக்கு, 2011ல், குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. இதில், ஒதுக்கீடு ரத்தானது, ஒதுக்கப்படாதது என, மீதமிருந்த, 91 வீடுகளை, பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் விலைக்கு வாங்கின. இத் திட்டத் தில், ஒரு சதுர அடி, 2,442 ரூபாய் என்ற குறை வான விலையில், அதிகாரிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டன.

கட்டுமான செலவு அதிகரித்த நிலையில்,
வீடுகள் விலையை உயர்த்தும் வீட்டுவசதி வாரியத்தின் முயற்சி, ஐ.ஏ.எஸ்., அதிகாரி களின் கடும் எதிர்ப்பால், கைவிடப்பட்டது. வீட்டுவசதி வாரியத்தின் மற்ற திட்டங்களில், சதுர அடி, 3,000 ரூபாய்க்கு மேல்நிர்ணயிக்கப் பட்ட நிலையில், இங்கு மட்டும் மிக குறைந்த விலையில் வீடுகள் வழங்கப்பட்டன.

மேலும், வேறு எந்த திட்டத்திலும் இல்லாத வகையில், அதிகபட்ச நவீன வசதிகளை வீட்டு வசதி வாரியம் செய்து கொடுத்துள்ளது.விலை வேறுபாடுநட்சத்திர ஓட்டலுக்கு நிகரான வகையில், அனைத்து நவீன வசதிகளையும் உள்ளடக்கியதாக கட்டப்பட்ட இந்த வீடுகள், 2017ல் ஒதுக்கீட்டாளர் களுக்கு ஒப்படைக்கப்பட்டன. வீடுகளை பெற்றவர் களில், பல ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதில் குடியேறு வதை விட, மறு விற்பனையில் ஆர்வம் காட்டுகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி, 15 அதிகாரிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளை விற்றுள்ளனர். 65 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய வீடுகளை மூன்று அதிகாரிகள், ஒரு கோடி ரூபாய்க்கு குறைவாகவும், எட்டு அதிகாரிகள், ஒரு கோடி ரூபாய்க்கு மேலும், நான்கு அதிகாரிகள், இரண்டு கோடி ரூபாய்க்கு மேலும் விலை வைத்து, வீடு விற்பனையை பதிவு செய்துள்ளனர்.

விசாரணை தேவை...

இது குறித்து, வீட்டுவசதி வாரியத்தின் மற்ற திட்டங்களின் விண்ணப்பதாரர்கள் கூறிய தாவது: சுயநிதி முறையில், ஒதுக்கீட்டாளர் களிடம் பணம் வாங்கி கட்டப்பட்ட வீடுகள் என்றாலும், இவை அதிகாரிகளுக்கான சலுகை விலையில் வழங்கப்பட்டவை. சென்னையில், வேறு வீடு இல்லை என்று கூறி, வாங்கிய வீட்டை, அதிகாரிகள் விற்றுள்ளனர்.

விற்பது அவர்களது உரிமை என்றாலும், ஒரே அளவிலான வீடு, வெவ்வேறு விலைகளில் விற்கப்பட்டுள்ளது. விலை பின்னணியில் முறைகேடு எதுவும் நடந்துள்ளதா என்பதை, சம்பந்தப்பட்ட துறையினர் விசாரிக்க வேண்டும். இதில், சில ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், தங்கள் வீட்டை, வணிக ரீதியிலான நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர். இது குறித்தும், வீட்டுவசதி வாரியம் விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.