05/12/2018

ஸ்டெர்லைட் வழக்கு விவகாரம்: வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட்...


ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கியுள்ள உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் எங்களது கருத்தை கேட்க வேண்டும் என வேதாந்தா நிறுவனத்தின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராடத்தில் சுமார் 13பேர் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டனர். இதையடுத்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையால் ஆலை மாவட்ட ஆட்சியாளரால் சீல் வைத்து இழுத்து மூடப்பட்டது. இதையடுத்து ஆலையை ஆய்வு செய்ய ஓய்வு நீதிபதி தலைமையில் மூன்று பேர் கொண்ட ஆய்வுக்குழு உருவாக்கப்பட்டது.  இதில் தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் சார்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த மாதம் 28ம் தேதி ஒரு உத்தரவை பிறப்பித்தது.

அதில்,”ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உயர்நீதிமன்ற ஓய்வு நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் சிறப்பு குழு தாக்கல் செய்த ஆய்வறிக்கையை தீர்ப்பாயம் பரிசீலனை செய்துள்ளது. அதில் ஆலையை சில நிபந்தனைகளுடன் திறக்காலம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் குறைகள் இருப்பின் அடுத்த ஒரு வாரத்தில் எழுத்துப்பூர்வமான பதிலை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தாக்கல் செய்யலாம் எனக்கூறிய தீர்ப்பாயம் வழக்கை டிசம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டிருந்தது.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தேதிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய விவகாரம் தொடர்பாக வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசோ அல்லது பொதுநல மனுவோ தாக்கல் செய்தால் உச்ச நீதிமன்றம் எங்களது தரப்பு பதிலை கேட்காமல் எந்த புதிய உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என தெரிவித்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.