27/01/2019

பிரார்த்தனைகள்...


நம் சுய தேவைகளின் ஒலி வடிவமாய் நம் பிரார்த்தனைகள் எப்போதும் இருக்கும்.

நம் பிரார்த்தனைகள் யாரால் கேட்கப் பட்டு, எங்கு நிறைவேறுகிறது என சுய விசாரணை செய்ததுண்டா ?

மொழிவழி பிரார்த்தனை மட்டுமே கேட்கப்படும் என்றால் மொழி இல்லா உணர்வு பிரார்த்தனை யார் கேட்பது ?

இயற்கை நம்முள்ளே ஒரு விஞ்ஞான பிரார்த்தனையை தினமும் நடத்திகிறது.

அதற்கு மொழியில்லை. ஆம்...

நம் நுரையீரலின் பிரார்த்தனையில் மூச்சு வரமாகிறது..

கணையத்தின் பிரார்த்தனையில் உணவு இரசாயன சக்தியாகிறது..

இருதயத்தின் பிரார்த்தனையில் இரத்தம் திரவ இயக்கம் பெறுகிறது… 

இது உடலின் அதிர்வு ஒலி இயக்கம்.

உடலின் மொழி வழி இல்லாத கூட்டு பிரார்த்தனைகள் முழுமையாக நிறைவேறும் போது , நம் மொழி வழி பிரார்த்தனைகள் எங்கு செல்கின்றன ?

நம் பிரார்த்தனைகள்,  நம் குரல்கள் நம்முள்ளே மறுசுழற்சியில் கேட்கும் ‘ஒலி நிகழ்வு விஞ்ஞானம்’ .

நம் அழுத்தமான குரல் வடிவம் மூளையில், மொழி அதிர்வு தூண்டுதல் பெற்று மொழி கவரும் அலைகளய் காற்றிலே பரவும்; ஒப்புடைய மொழி அதிர்வுள்ள மாற்று மனிதர்களோடு கலக்கும்.

சுய விசாரணை பகுதி நம்முள் இருந்தால் வரம் நமக்குள்ளும் சுரக்கும்.

மனிதர்களில் நிகழும் ஒலி அதிர்வு விஞ்ஞான விளைவுகள் தான் வரங்களாக நமக்கு மாற்று மனிதர்களிடமிருந்தும் கிடைக்கிறது.

பிரார்த்தனைகள் நம்மில் தொடங்கி நம்மில் முடியும் ஒரு ஒலி அதிர்வு விஞ்ஞான கிரியை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.