22/03/2019

தூத்துக்குடியில் தமிழிசை, சிவகங்கையில் எச்.ராஜா.. தமிழகத்திற்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக...


தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலுக்கா, பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியலை மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா வெளியிட்டார்.

இந்த பட்டியலில் 182 வேட்பாளர்கள் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. கடந்த லோக்சபா தேர்தலை போலவே, உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் மீண்டும் நரேந்திர மோடி போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல தமிழகத்திற்கான வேட்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி  தமிழிசை சவுந்தரராஜன்
சிவகங்கை  எச்.ராஜா
கன்னியாகுமரி  பொன். ராதாகிருஷ்ணன்
கோயம்புத்தூர் சி.பி.ராதாகிருஷ்ணன்
ராமநாதபுரம் நயினார் நாகேந்திரன்

இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அந்த 5 தொகுதிகளுக்கும் வேட்பாளர் விவரங்கள் அறிவிக்கப்பட்டுவிட்டன.

அதேநேரம், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் வேட்பாளர் பெயர்கள் அறிவிப்பில் இழுபறி நீடித்து வருகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.