22/03/2019

ஸ்டெர்லைட் வேதாந்தா & பாஜக மோடி இணைந்து மொத்த இந்திய மக்களையும் கொலை செய்கிறது...


ஒடிசாவில் லான்ஜிகர் பகுதியில் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான அலுமினிய சுத்திகரிப்பு ஆலை 250 ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த ஆலைக்கு எதிராக உள்ளூர் மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு தரப்பினர் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பின்னணியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரி முதன்மை வாயிலில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை ஓ.ஐ.எஸ்.எப்  எனும் காவல்துறையினர் அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது போராட்டக்காரர்கள் ஆலைக்குள் நுழைந்தனர்.

அவர்களை காவல்துறை  தடுத்தப் போது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கூட்டத்தைக் கலைக்க காவல்துறை  தடியடி நடத்தினர். இதில் தானி பத்ரா (45) என்பவர் உயிரிழந்தார். 40 பேர் காயமடைந்தனர். அவர்கள் லான்ஜிகர், விஸ்வானந்தபூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் லான்ஜிகரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆலைக்கு செல்லும் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஒடிசாவின் நியாம்கிரி மலைப்பகுதியில் பாக்ஸைட் தாதுவை வெட்டியெடுக்க வேதாந்தா குழுமம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதை எதிர்த்து அந்தப் பகுதி பழங்குடி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.