24/07/2020

மனிதன் எத்தனை வகை...



மற்றவர்களிடம் பழகும் விதத்தை வைத்து மனிதனை மூன்று வகையாகப் பிரிக்கலாம்...

1.Introverts  : மற்றவர்களிடம் அதிகம் பழக மாட்டார்கள்.தனிமையை ரசிப்பார்கள். அதற்காக மற்றவர்களை அவர்களுக்குப் பிடிக்காது என்று அர்த்தம் இல்லை.அன்பும் பாசமும் இருந்தாலும் வெளிப்பாடு வெளிப்படையாய் இருக்காது..

2.Extroverts : எப்போதும் சகஜமாகப் பழகுவார்கள்.ஆட்கள் இருக்கும் சூழலையே விரும்புவார்கள். வெளிப்படையாகத் தங்கள் உணர்வுகளைக் காட்டுவார்கள்.

3.ambiverts : மேலே கூறிய இருவகையினருக்கும் இடைப்பட்டவர்கள்.

மனிதனின் புத்தியின் தன்மை கொண்டு மனிதர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்...

தைல புத்தி : ஒரு பாத்திர நீரில் எண்ணெயை விட்டால் நீரின் மேல் எண்ணெய் அப்படியே பரவும். அதுபோல கேட்ட விஷயத்தை நன்கு புரிந்து கொண்டு இதரர்களுக்கும் சொல்லித் தெளிய வைப்பார்கள்.

கிரத  புத்தி : நெய்யை வழித்து ஒரு பாத்திர நீரில் போட்டால் அந்த நெய் அப்படியே மிதக்கும். பிறரிடம் கேட்பதை அப்படியே தான் அறிந்து கொள்வர்.பிறர் கேட்டால்  சொல்லத் தெரியாது.

கம்பள புத்தி : விழாவில் கம்பளம் விரித்து,விழா முடிந்தவுடன் ஒரு உதறு உதறி வைப்பது போல வரும் போது ஒன்றும் தெரியாமல் வந்து திரும்பப் போகும் போது உதறிய துப்பட்டி போல ஒன்றும் தெரிந்து கொள்ளாமல் பொய் விடுவர்.

களி மண்  புத்தி: எந்த விசயமும் இவர்களுக்குப் புத்தியில் ஏறாது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.