24/07/2020

கோவிலில் தமிழில் மந்திரம் ஓதவேண்டும் என்று செல்பவர்கள் ஏன் மசூதி, தேவாலயத்தில் தமிழில் மந்திரம் ஓத சொல்வதில்லை. என்று ஒருசிலர் கேள்வி கேட்கிறார்கள்.... அவர்களின் புரிதல்களுக்காக.. இந்த பதிவு...



நாங்கள் முருகனுக்கும், சிவனுக்கும் , கருப்பன், மாயாண்டி, அய்யனார், சுடலை மாடன், மாரியாத்தாள் போன்ற தமிழர் தெய்வங்களுக்கு தான் தமிழ்வழி வழிபாடு நடத்தனும்னு கேக்குரோம்..

ராமர்- அயோத்திகாரர்
பிள்ளையார்-மகாராஷ்டிரா காரர்...
அல்லா-அரேபியன்..
ஏசு-ஐரோப்பியன்..

ஆகவே இவர்களுக்கு எந்த மொழியில் வேண்டாலும் மந்திரம் ஓதட்டும் அது எங்கள் பிரச்சனை இல்லை..

எங்களோட தமிழர் மதங்களான சைவ, வைணவ தெய்வங்களுக்கும், தமிழர் குல தெய்வங்களுக்கும் தான் நாங்க எங்கள் மொழி தமிழில் வழிபாடு கேட்கிறோம்...

வாடா..கருப்பா.. எப்படா மழ பெய்யும் னு நாங்க direct ah எங்க குலசாமியிடம் தமிழ்ல தான் பேசிட்டு இருக்கோம்...

அவனும் பதிலுக்கு அப்பிய, கார்த்திகையில அடமழ பேச்சு மார்கழியில மட நெரம்பும்.... அட்ரா கொட்ட அப்டினு எங்க சாமியும் எங்களிடம் தமிழில் தான் பதில் சொல்ரான்..

நடுவுலு எதற்கு எங்களுக்கும், எஞ்சாமிக்கும் புரியாத சம்பந்தம் இல்லாத சமஸ்கிருதம் ?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.