19/08/2020

தமிழர்களின் உண்மையான வழிபாடு : சிறுதெய்வ வழிபாடு...



சிறுதெய்வ வழிபாடு தமிழர்களின் வழிபாட்டில் சிறுதெய்வ வழிபாடு மிகவும் முக்கியமானது..

தங்களின் மூதாதயர்களை நினைவில் நிறுத்த இந்த வழிபாடு செய்யப்படுகிறது..

மாசி பெரியண்ணன் : பெரியசாமி ஒரு கிராம காவல் தெய்வம். சங்கிலி கருப்பு, முனி, பெரியசாமி, பெரியண்ணன் என பல பெயர்களில் இருக்கும் மாசி பெரியண்ணனை அழைக்கின்றனர்.

சோழிய வெள்ளாளர், கொங்கு வெள்ளாள கவுண்டர் ஆகிய சமூகங்களின் குலதெய்வமாக மாசி பெரியண்ணன் வணங்கப்படுகிறார்.

கொல்லிமலையின் உச்சியில் உள்ள மாசி குன்றில் இவரது கோவில் அமைந்துள்ளது. இவர் காசியிலிருந்து வந்த சிவரூபமாக எல்லோரும் வணங்குகின்றனர். மகாசிவராத்திரி மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

சுடலை மாடன் : சுடலை மாடன் ஒரு கிராம காவல் தெய்வம்..

சுடலை மாடன் வழிபாடு தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருக்கும் கிராமங்களில் பரவலாக இருக்கின்றது.

கோனார், தேவர், பறையர், நாடார் ஆகிய சாதிச் சமூகக் குடும்பங்கள் சிலவற்றின் குலத் தெய்வமாக சுடலை மாடன் வணங்கப்படுகிறார்.

சுடலை மாடன் கிராமத்துக் கடவுளாக இருப்பதால் வழிபாடும் கிராமம் சார்ந்ததாகவே இருக்கிறது.

கறுப்புசாமி : கருப்பசாமி ஒரு கிராம காவல் தெய்வம்.

கருப்பசாமி சங்கிலி கறுப்பன் என்றும் அழைப்பதுண்டு.

கருப்பசாமி வழிபாடு தமிழ்நாட்டு கிராமங்களில் பரவலாக இருக்கின்றது. கருப்பசாமி வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்புடுவதுண்டு.

மதுரை வீரன் : மதுரை வீரன் ஒரு கிராம காவல் தெய்வம். மதுரை வீரன் வழிபாடு தமிழர் மத்தியில் சில கிராமங்களில் இருந்து வருகிறது.

மதுரை வீரன் வழிபாடு ரியூனியன் மற்றும் கரிபியன் தீவுகளில் வாழும் தமிழர் மத்தியிலும் பரவலாக இருக்கின்றது. மதுரை வீரன் வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்புடுவதுண்டு.

அய்யனார் : அய்யனார் ஒரு நாட்டுப்புறக் காவல் தெய்வம்.

பழங்காலம் தொட்டே அய்யனார் வழிபாடு தமிழர் இடையே இருந்து வருகிறது.

குறிப்பாக மதுரையிலும் சுற்றியுள்ள சிற்றூர்களிலும் இது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. அய்யனார் வழிபாட்டைச் சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு.

இசக்கி அம்மன் : இசக்கி அம்மன் ஒரு நாட்டுப்புற காவல் தெய்வம்.

இசக்கி அம்மனை திருநெல்வேலி, கன்னியாகுமரி , சேலம் மாவட்டங்களில் சிறப்பாக வழிபடுகின்றனர். இசக்கி அம்மன்.

உண்மையில் தமிழர்கள் தன்மானதோடும், வீரத்தோடும், பண்பாடோடும் இயற்கையையும், தங்கள் குலத்தை காத்தவர்களையும் தெய்வமாய் வழிபட்டு வந்திருந்தினர்.

இன்னும் பல தெய்வங்கள் உள்ளன...

நம் வழிபாடு இயற்கையை சார்ந்ததே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.