19/08/2020

குடியிருப்பு பகுதியில் குப்பைகளை கொட்டி சுகாதார சீர்கேடு - தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் சென்னை மாநகராட்சி...



பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் 2, 16வது வட்டத்தில், (பகுதி-2) phase -2 வில் ஆறாவது மற்றும் ஏழாவது பிளாக் ஆகிய இரண்டு பகுதியிலும் தனியார் நிறுவனங்கள் சில குப்பைகளை மலை மலையாக தினமும் கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவதாகவும், மாநகராட்சி அதிகாரிகள் அதனை கண்டு கொள்வதில்லை எனவும் அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் " ஒருமுறை அல்ல இருமுறை அல்ல தொடர்ந்து இந்த இடத்தில் தனியார் நிறுவனங்கள் சில குப்பைகள் கொட்டுகின்றனர், இதனை மாநகராட்சி அதிகாரிகளிடம் நேரிலும் மற்றும் தொலைபேசியிலும் தெரிவித்துள்ளோம். அதற்கு மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறையிடம் புகார் மட்டுமே கொடுக்கின்றனர் அதற்கு மேல் அந்த புகாரின் மேல் வேறு எவ்வித நடவடிக்கைகளும்  எடுப்பதில்லை. தற்போது கூட இன்று காலையில்  இந்த இடத்தில் குப்பையை கொட்டி சுகாதார சீர்கேட்டை  உண்டாக்கி இருக்கின்றனர் " என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து மணலி புது நகர் குடியிருப்போர் சங்க தலைவர்  வழக்கறிஞர் கா.பாலமுருகன் கூறுகையில் " பல முறை புகார் செய்தும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர், இன்று காலை நான் நேரில் அந்த பகுதிக்கு நேரில் சென்று சென்று பார்த்ததில், 10 லாரிக்கும் மேற்பட்ட  குப்பைகளை கொண்டு வந்து கொட்டியுள்ளது தெள்ளத் தெளிவாகத் தெரிய வருகிறது. எனவே இந்தப் பகுதியில் குப்பைகளை கொட்டுவது தொடராமல் இருக்க மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறினார்,..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.