03/08/2020

நவீன சுரண்டல் எது தெரியுமா?



நேரடியாக வந்து பிச்சை கேட்டால் தரமாட்டார்கள் என தெரிந்து.. GST என்ற பெயரில் கேட்கிறார்கள் அவ்வளவே..

ஒரு நாட்டின் பொருளாதாரம் பொதுமக்கள் செலுத்தும் வரி வசூலில் மட்டும் நடப்பதில்லை இது மன்னர் காலத்து நடைமுறை.

மும்மாரியும் பதும வரி சங்க வரி.. இவைகள் எல்லாமுமே மன்னர் காலத்து நடவடிக்கை..

தற்கால முறை யாதெனில்.. ஒரு நாட்டின் அஸ்திவாரத்தை ஊக்குவிப்பதே..

உதாரணமாக அமெரிக்கா வெறும் விவசாயம் செய்து தமது நாட்டை வளர்ச்சி நாடாக ஆக்க முடியாது அவனுக்கு ஆயுதங்கள் விற்பதே பிரதான தொழில்..

அரபு நாடுகளும் அப்படியே..

அரபு நாடு அரிசி ஏற்றுமதி செய்து வளர்ச்சியை கொண்டு வரமுடியாது அவனுக்கு எண்ணெய் வளங்கள் தான் நாட்டின் பிரதான சொத்து..

இப்படியாக ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு விஷயம் உண்டு அதை மெருகூட்டி மக்களை ஊக்குவித்து தமது நாட்டை வளர்ந்து எடுப்பதே சிறந்த ஆட்சியாளர்களின் பண்பு..

இதுல கொடுமை என்னவென்றால் இவைகள் எல்லாமே நமது இந்தியாவில் உண்டு விவசாயத்தை மையப்படுத்தி சென்றாலும் வளர்ச்சியை கொடுக்கலாம்..

தொழிற்சாலையை மையப்படுத்தி சென்றாலும் வளர்ச்சியை கொடுக்கலாம்..

கனிம வளங்களுக்கும் தண்ணீருக்கும் அண்டைய நாடுகளில் கெஞ்சி கொண்டு இருக்கும் எத்தனையோ நாடுகள் இன்றும் கூட உண்டு..

நமது நாட்டில் அதற்கும் பஞ்சம் இல்லையே ?

நமது நாட்டில் குறை என்று எதை கூறுவார்கள் தெரியுமா ?

மக்கள் தொகை தான்..

உண்மையில் மக்கள் தொகை அதிகமிருப்பது பெருமைக்குரிய விஷயம் ...

இதற்கு உதாரணம் சீனா..

அவனுடைய நாட்டு மக்களுக்கு தேவையான கல்வி மற்றும் வேலைவாய்ப்பை தருகிறானே..

உலகில் தாய்நாடு அல்லாமல் மற்ற நாட்டில் வேலை செய்வதில்..  இந்தியர்கள் ஏறக்குறைய முதலிடம் இருப்பார்கள் இதில் என்ன பெருமை உள்ளது இதுவே வளமே இல்லாத சின்ன நாட்டு மக்கள் என்றால் கூட சரி எனலாம்..

இந்த காலகட்டத்தில் அவர்கள் கூட தம் நாட்டு பிரஜைக்கு தேவையானவற்றை அழகாக கொடுக்கிறார்கள்.

வளங்கள் இருந்தும், மக்கள் இருந்தும் அந்த மக்களிடம் இருந்து வரியை பிடிங்கி வாங்கி கொண்டும்..

அந்த நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரமுடியவில்லை எனில் வெட்கப்பட வேண்டியது அத்தணை அரசியல்வாதிகளும் தான்...

இந்த இலட்சணத்தில் புதிய இந்தியா வேறு அடிக்கடி பிறக்கிறது..

Road tax, Root tax, year tax, life time tax
சாலைக்கும் வரி கொடுக்கனும் வாகனம் வாங்கினாலும் வரி கொடுக்கனும் இது பத்தாதுன்னு அண்டைய மாநில வரி மற்றும் சுங்க வரி...

இதெல்லாம் எவன் காசு..

இதெல்லாம் விட இன்னும் ஒரு கொடுமை என்னவென்றால் உலக நாட்டில் இருந்து கடன் வேறு ...

கடைசியாக..

வரி வசூலித்துதான் அரசாங்கத்தை நடத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை நாட்டின் உற்பத்தி மகசூலை அதிகரித்தாலே போதும்
இதெல்லாம் சிந்திக்காமல் தங்கள் விதியை நினைத்து வாழ்ந்து கொண்டு இருக்கும் மக்களிடையே..

இன்னும் பிடுங்க வேண்டும் என்பதற்கு பதிலாக பிச்சை எடுத்து அரசாங்கத்தை நடத்தலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.