21/08/2020

தற்கொலை எண்ணத்தை யார் தீர்மானிக்கிறார்கள்?


ஆன்லைன் வகுப்பு போன் வாங்க முடியவில்லை என்று ஒரு மாணவன் தற்கொலை செய்துள்ளான்.

ஏழை தந்தை தன் மகளின் ஆன்லைன் கல்விக்காக வியாபாரத்திற்காக வைத்திருந்த ஒரே ஒரு கறவை மாட்டை விற்று போன் வாங்குகிறார்.

நீட் தேர்வுக்காக ஆன்லைன் வகுப்பில் சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொள்கிறாள்.

இப்படி ஆன்லைன் கல்விக்காக காவு வாங்கப்படும் ஆன்லைன் மாணவர்கள் தற்கொலைகளுக்கு யாரால்  தீர்வு காண முடியும்?

அரசு தீர்வு காண வேண்டுமா? அல்லது ஆன்லைன் வகுப்புகள் நடத்தி பெற்றோர்களிடம் பணம் பறிக்கும் முதலாளித்துவ கல்வி கொள்ளையர்கள் தீர்வு காண வேண்டுமா?

முதலாளித்துவம் கொடுரமான ஒரு மாயையை கொண்டது. அனைத்து துறைகளில் உள்ள மனிதர்களிடமும் ஊடுருவி நிற்கிறது. மூலதனம் முதலீடு லாபம் பணம் தவிர அதனிடம் வேறொன்றையும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.