18/08/2020

எதிர்காலத் தமிழகமும் : எனது கனவும் : நிதி, பொருளாதாரம்...



நிதி, பொருளாதாரம்...

1. ஒவ்வொரு 10 வருடத்திலும் பணம் முறை முற்றிலும் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

உதாரணமாக காகிதப்பணம் ஒழிக்கப்பட்டு நெகிழி (பிளாஸ்டிக்) பண முறை கொண்டுவரப்பட வேண்டும்.

பின்பு முற்றிலும் உலோகப் பண முறை இப்படி.

காரணம் பணப்பதுக்கலுக்கு வாய்ப்பு இருக்காது. கறுப்புப்பணம் தானாக வெளி வந்துவிடும்.

2. எந்த வித நிதி தொடர்பான கொடுக்கல் வாங்கல் முறைக்கும் நிதி அட்டை (பான் அட்டை போல நிதி நிர்வாக அட்டை) கொண்டு வர வேண்டும்..

3. தேநீர்க்கடையில் கூட ரசீது தரவில்லை என்றால் கடை இழுத்து மூடப்பட வேண்டும்.

4. ஒவ்வொருவரின் நிதி நிலவரமும் மாநில மைய அமைப்போடு இணைக்கப்பட வேண்டும்.

தவறான வழியில் எந்தத் தனி நபரும் செல்லாத நிலையில் எந்தவித அரசுக்குறுக்கீடும் இல்லாது அவர்கள் சுதந்திரமாக செயல்பட முடியும்.

தனி நபர் உரிமையும் சமூகக் கட்டுப்பாடும் இணைந்தே செல்லும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.