02/09/2020

விவேகானந்தர் எழுப்பிய குண்டலினி சக்தி...


குண்டலினி யோகத்தின் சாராம்சம் இதுதான்...

பத்மாசனத்தில் அமர்ந்து கொண்டு கண்களை மூடிக்கொண்டு நாடி சுத்தி செய்து சுவாசத்தை சூட்சும்னா நாடியில் ஓடும்படி செய்து கொள்ள வேண்டும்.

பின் சுவாசத்தை இழுத்து பிராணயாமத்தின் மூலம் கும்பகம் செய்ய வேண்டும்.

அப்போது இந்த குண்டலினி (ஆழ்மனம்) ஐ கவனிக்க வேண்டும்.

நமது வாசியை கொண்டு மூலாதரத்தை தாக்க வேண்டும்.

இவ்வாறு பல வருடம் தொடர்ந்து சுவாசித்து கும்பகம் செய்து குண்டலினியில் வாசியை (சுவாசத்தை) கொண்டு தாக்கினால் மூலாதாரத்தில் ”ஒளி “ தோன்றும்.

அதன்பிறகு இதர சக்கரங்கள் தெளிவாக தெரியும். அதன்பிறகே குண்டலினி சக்தி மேலெழும்.. ஆழ்மனம் மேல் எழும்...

மூலாதாரத்தில் ஒளியை காணாதவரை குண்டலினி மேலே எழாது.

மூலாதரத்தை (ஆழ்மனம்) எழுப்ப இதுவே ஒரே வழி என்று சித்தர்கள் திட்டவட்டமாக குண்டலினி யோகத்தில் கூறுகிறார்கள்...

குண்டலினி யோகத்தில் என்ன நடக்கிறது?

பிராணயாமத்தின் மூலம் சுவாசத்தை இழுத்து கும்பகம் செய்வதன் மூலம் ஆக்ஸிஜன் நமக்கு கிடைக்கிறது. இந்த ஆக்ஸிஜன் (வாசியை)மூலாதரத்தில் தாக்க வேண்டும்.

அதாவது மூலாதரத்தில் உள்ள அடர்பாஸ்பரஸ் உடன் ஆக்ஸிஜன் சென்று தாக்க வேண்டும். அப்போது பாஸ்பரஸ் உடன் ஆக்ஸிஜன் வினை புரிந்து ஒளியை கொடுக்கும். அமானுஷ்ய சக்தி கிடைக்க பெறும்.
சாதகனுக்கு தெய்வீக அனுபவங்கள் கிடைக்க பெறும்.

ஆனாலும் இந்த குண்டலினி யோக பயிற்சி மூலம் எல்லா சீடனாலும் மனிதர்களாலும் சுவாசத்தின் மூலம் பிராணா சக்தி (ஆக்ஸிஜன்)அதிகம் கவரப்பெற்று ஆழ்மனதிற்கு அனுப்பி அடர்பாஸ்பரஸ் ஆக்சைடை இயக்கும்படி செய்ய முடியாது.

ஜோதிட சாஸ்திரப்படி சிலரது ஜாதகத்தில் அமானுஷ்ய சக்தியை பெறுவதற்கு ஏற்ற கிரக நிலையை அமைய பெற்றவராக இருக்க மாட்டார்.

அப்படிப்பட்டவர்களால் அமானுஷ்ய சக்தியை பெறும் பொருட்டு இந்த குண்டலினி யோகம் செய்தாலும் பலன் கிடைக்காது.

ஜாதகத்தில் சனி நீசப்பட்டு இருப்பவர்களுக்கு அவர்களது உடலில் இரும்பு சத்து மிக குறைவாக இருக்கும்.

அதனால் அதிக ஆக்ஸிஜனை பெற முடியாமல் போவர்.

ஆனால் குரு இதனை நன்கறிவார்.

எந்த சீடன் தனக்கு மிகவும் பிடித்து உள்ளதோ , எவன் மிகவும் நேர்மையானவனாக இருக்கிறானோ அவனுக்கு அவரது ஜாதகம் சரியில்லை என்றாலும் சில தாந்திரீக வழியை - குறுக்கு வழியை கடைபிடித்து அந்த சீடனை முன்னேற்றுவார்.

அதாவது அந்த சீடனுக்கு இரும்பு சத்து உள்ள மூலிகைகளை சாப்பிட கொடுப்பார்.

பின் குரு தன் உடலில் பிராணயாமத்தின் மூலம் மிக அதிகமாக சேகரித்து வைத்து இருந்த பிராணா சக்தியை சீடனது மூலாதாரத்தில் கை வைத்து விரல்கள் மூலம் பாய்ச்சுவார்.

அவரது பிராணனால் சீடனது ஆழ்மனம் அடர் பாஸ்பரஸ் ஆக்சைடு அதிகமாக இயங்க ஆரம்பித்துவிடும்.

சாதகன் தெய்வீக அனுபவத்தை பெற ஆரம்பித்து விடுவான்.

இந்த முறையில் குரு தீட்சை அளிப்பது என்பது தனக்கு மிகவும் விருப்பமான சிடனுக்கு மட்டும் தான் செய்வார்.

ஏனெனில் பல காலம் பயிற்சியின் மூலம் பெற்ற பிராணா சக்தியை செலவு செய்வது என்பது பொதுவாக யாரும் விரும்புவது இல்லை.

ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு விவேகானந்தர் மீது ஒரு தனி அக்கறை இருந்தது.

ராமகிருஷ்ணரை பார்த்ததும் விவேகானந்தர் கேட்ட கேள்வி.. கடவுளை பார்த்து இருக்கிறீர்களா?

ராமகிருஷ்ணர் சொன்ன பதில்; ஆம் பார்த்து இருக்கிறேன். உனக்கும் காட்டுகிறேன்.

விவேகானந்தருக்கு ராமகிருஷ்ணர் தன் பிராணா சக்தி முழுவதும் கொடுத்து தீட்சை வழங்கி உள் ஒளியை காட்டினார்.

அதாவது கடவுளை காட்டினார்.

குண்டலினி எழுப்பியதும் பல சக்திகள் விவேகானந்தருக்கு கைவரப்பெற்றாலும் தன் சக்தியை அவர் வீணடிக்கவில்லை.

பல ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட பெரும் நூல்கள் எல்லாம் சில மணி நேரங்களில் மனப்பாடமே செய்து விடுவாராம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.