01/09/2020

மெய்தீண்டா கால வர்மம்- அபூர்வ ரகசிய கலை...


மெய்தீண்டாகால வர்மம் என்பது ஒருவரை தொடாமலே பிராண சக்தி வசிய மூலிகைகள் கொண்டு தாந்திரீக அடிப்படையில் அந்த மூலிகைகளை வாயில் அடக்கி கொண்டு பிறரின்  நெற்றி பொட்டில் உற்று பார்த்து அவரது உடலில் இருந்து பிராணனையே உறிஞ்சி எடுத்து விடுவர். எதிரி உடலில் இருந்து பிராணன் தானாக குறைய ஆரம்பிக்கும். அவன் மயக்கம் அடைந்து மாண்டு போவான்.

இது போன்ற மிக பயங்கரமான தாந்திரீக வர்ம முறைகளும் இதில் அடங்கி இருக்கிறது.

நாடிகள் உண்மையிலேயே சக்தி வாய்ந்தவை தான். நாடிகள் மிக சிறப்பான வேலைகள் எல்லாம் செய்யக் கூடியது. இப்படிப்பட்ட சக்திவாய்ந்த நாடிகள் வழியேதான் நாம் உண்ட உணவின் சக்தியானது செல்கிறது. உணவின் சக்தியானது இந்த நரம்புகள் , நாடிகள் மூலம் உடல் முழுக்க பரவும்போது உடல் வளர்சிதை மாற்றம் உண்டாகிறது.

உணவின் சக்தியானது புத்திக்கு போகும் போது உணவின் சக்தியை பெற்ற புத்தி அதற்கு ஏற்ற எண்ணங்களை கொடுக்கிறது. அந்த எண்ணத்தின் மூலம் உடலை இயக்கி வைக்கிறது.

உதாரணமாக...

செக்ஸ் உணர்வை தூண்டும் உணவை சாப்பிட்டால் அந்த சக்தி உடலில் ரத்தத்தின் மூலம் நரம்புகள் வழியே பாய்ந்து அதற்க்கு என்று உள்ள இனப்பெருக்க உறுப்புகளை தாக்கி ஹார்மோன்களை தூண்டி உடலில் செக்ஸ் க்கான ஆயத்தங்களை செய்து விடுகிறது.

மேலும் உணவின் சக்தி +ஹார்மோனின் சக்தியானது நாடிகள் மூலம் புத்திக்கு செல்கிறது. இந்த சக்திகளால் தூண்டப்படும் புத்தி செக்ஸ் சம்பந்தமான என்ண அலைகளை பெறுகிறது. அதனால் புத்தியும் அது சம்பந்தமாக உடலை இயக்குகிறது.

மேலும் உணவின் சக்தி +ஹார்மோனின் சக்தியானது மிக மெல்லிய நாடிகள் மூலம் சூட்சும பிராண உடலுக்கு சென்று அங்கு பரவிய பின் மனோ உடலுக்கு சென்று மனதிலும் இந்த சக்தி குணம் செயல்படுகிறது.

இந்த சக்தியை மிக குறைவாக மனம் பெற்று இருந்தால் அது பிராண உடலுடன் இணைந்து உள்முகமாக இயங்கும். அதாவது தூக்கத்தின் பொழுது கனவு காணும்.

அதுவே உணவின் சக்தி மிகவும் அதிகமாக இருந்தால் அது மனதை அதிகமாக தூண்டி மனமே நேரடியாக உடலை இயக்கும்படி செய்யும். அப்படி செயல்படுபவர்கள் தான் குற்றவாளி ஆகிறார்கள்.

எனவே எந்த உணவு எந்த உணர்வை தூண்டி விடுகிறது என்பதை அறிந்து வைத்திருப்பது அவசியம்.

அவ்வாறு செயல்படாமல் கண்டதை சாப்பிட்டு வாழ்ந்தால் நாம் நம்மையே அறியாமல் குற்றவாளியாக மாறுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.