28/01/2021

சூரியனை பார்க்க கூடாத நேரம் என்ன?

 


கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விடயம்..

பழங்காலத்தில் நீரில் பிரதிபலிக்கும் சூரியனை மக்கள் பார்க்கக்கூடாது என்பதற்காக, சூரியன் வருண பகவானுடன் இணைந்திருக்கும் காட்சியைக் காணக்கூடாது என்று கூறி வந்தனர்..

சூரியனைப் பார்க்கக்கூடாத நேரங்களும் உள்ளன..

சூரியன் நீரில் பிரதிபலிக்கும் போதும், நடுபகலிலும் சுட்டெரிக்கும் சூரியனைப் பார்க்கக் கூடாது..

பொதுவாக ஜொலித்து நிற்கும் சூரியனை வெறும் கண்களால் காண்பது தீங்கு விளைவிக்கும்.

நடுப்பகலில் சூரியனைப் பார்ப்பதால் பார்வைக் கோளாறுகள் ஏற்பட வழியுண்டு.

விஞ்ஞானமும் இதனை ஒப்பு கொள்கிறது.

ஆனால் காலை வேளையில் கதிரவனை தரிசிப்பதும் வணங்குவதும் நன்று.

மாலை நேரத்தில் சூரியனைப் பார்ப்பதும் சூரிய ஒளியை உடலில் ஏற்பதும் அழகை அதிகரிப்பதற்கு உதவும் என்பது அறியப்பட்ட உண்மை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.