23/02/2021

கன்னட ஈ.வெ.ரா வும் திராவிட பொய் மூட்டை கதைகளும்...


கேரளாவின் வைக்கம் வரை சென்று போராடிய ஈ.வே.ரா. இந்த நம்பூதிரிப் பிராமணனின் அரசுக்கு எதிராக தனது பகுத்தறிவு தடியை சுழற்றியது உண்டா? இல்லையே? ஏன்?

1957ல் இந்தி(தீ)யக் கம்யூனிச கட்சி கேரளாவில் வாக்குச் சீட்டின் மூலம் ஆட்சியைப் பிடித்தது. அப்போது பிளவுபடாத இந்தி(தீ)யக் கம்யூனிச கட்சியில் இருந்த ஈ.எம்.எசு நம்பூதிரிப்பாட் கேரளாவின் முதல் அமைச்சராகத் தேர்தெடுக்கப்படார்.

அவர் முதல் அமைச்சராக ஆனவுடம் அவர் செய்த இரண்டாவது காரியம், ஆபாச கற்பனை புனைவுக் கதையாக்கக் கொண்டு கேரள மக்களால் இன்று கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை கேரள அரசின் தேசியப் பண்டிகையாக அறிவித்து , கேரளாவில் உள்ள கிறித்துவர், இசுலாமியர் உட்பட அனைவரையும் கொண்டாடும் படி அரசு சட்டத்தின் மூலம் அறிவித்தார்..

அதனை கேராளவில் உள்ள மக்களும் ஏற்றுக் கொண்டு இன்று வரை மலையாளக் கிறிசுத்தவர், மலையாள இசுலாமியர் உட்பட அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

ஒரு கம்யூனிசுடானவர் தனது அரசின் சட்டத்தின் மூலம் ஒரு குறிப்பிட்ட மத்த்தின் பண்டிகையை எல்லா மதத்தவரும் கொண்டாடும் படி செய்து தன்னை ஒரு மனுவாதி என்பதைக் கொஞ்சமும் கூச்சமில்லாமல் காட்டிக் கொண்டார் என்பது தெளிவாகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.