17/04/2021

தெலுங்கு நாயக்கர்களின் அற்பத்தனம்...

 


கங்கைகொண்ட சோழபுரத்தில் கோவிலின் வலதுபக்க பிரகாரச்சுவற்றில், கருவறைக்கு செல்வதற்கு முன்பான மண்டபச்சுவற்றில், முதல் சிலையாக நிற்கும் ஒரு சிலை ஒரு நாயக்கர் சிற்பம்.

எந்த நாயக்க மன்னன் எனத் தெரியவில்லை.

கிருஷ்ணதேவராயராக இருக்கவே வாய்புகள் அதிகம்.

சராசரி உயரமுள்ள அரசன் என போர்த்துசுக்கீய குறிப்புகள் சொல்கின்றன.

இங்கு சிலையின் உயரமும் குறைவே.

சிலையை சுற்றி சிவகணங்கள் வணங்கியபடி அமர்ந்திருக்கின்றன. ஆனால், மன்னர்களை சிவகணங்கள் என்றும் வணங்காது.

இங்கேயிருந்த சிவன் சிலையைப் பெயர்த்து அந்த இடத்தில் நாயக்க மன்னனில் சிலையை நிறுவியிருக்கிறார்கள்.

வெட்கம் கெட்ட அற்பத்தனத்தின் அளவுகடந்த நிலை இது.

தெலுங்கு நாயக்கர்களுக்கு சோழர்கள் அளவு நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட சிலைகளைச் செய்ய திறமையில்லை என்பதற்காக இப்படியா கீழ்த்தனமாக செய்வது?

இந்த இழிவான நாயக்க "சிலை திணிப்பு" தஞ்சை பெரியகோவில் உட்பட அனைத்து பெரிய கோயில்களிலும் உள்ளது.

முதலில் தமிழ் கலைகளை 'திராவிட கலைகள்' என்று திரிப்பதை தடுக்க வேண்டும்.

இதுபற்றி முறையான ஆய்வு நடத்தி திணிக்கப்பட்ட நாயக்கர்கால சிலைகளை பெயர்த்து வெளியேற்ற வேண்டும்..

இதுபற்றி எழுதிய எயில்நாடன் படங்களையும் இணைத்திருந்தார்.

அவர் எழுதிய அப்பதிவில் (கங்கை கொண்ட சோழபுரத்தில் நாயக்கர் சிலை) தற்போது படங்கள் நீக்கப்பட்டுவிட்டன...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.