இயல்பாகவே புரட்டாசி, ஐப்பசியில் சூரியன் பலமிழந்து காணப்படும்.
அதனால் அதிகப்படியான குளிர்ச்சி காணப்படும் அல்லது மழைப் பொழிவு இருக்கும்.
குளிர்ச்சியின் காரணமாக நமது உடலில் இயல்பாகவே வெப்ப சக்தி அதிகரிக்கும்.
நமது உடலில் உயிர் ஆற்றல் பெருக வெப்ப சக்தி தேவை.
எனவே நமது உடலில் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.
அந்த விந்துவில் உயிர் ஆற்றலும் வீரியமும் அதிகரிக்க புரட்டாசியில் அதிகப்படியான அசைவம் சாப்பிட வேண்டும்.
நம்முடைய சந்ததியை வீரிமில்லாத மலட்டு சமூகமாக உருவாக்க எதிரிகளால் திணிக்கப்பட்டது தான் புரட்டாசி விரதம்.
நல்ல ஆண்மை பலமும் வீரியமும் உள்ள அடுத்த தலைமுறையை உருவாக்க புரட்டாசியில் அசைவம் சாப்பிட வேண்டும்.
மேலும் புரட்டாசி ஐப்பசியில் சூரியன் பலவீனம் என்பதால் நம்முடைய முன்னோர்கள் நம்மைத்தேடி வருவார்கள்.
அவர்களை மகிழ்விக்க அசைவப்படையல் (பலி) கொடுத்தே ஆகவேண்டும்.
அப்படி அசைவப்படையல் போட்டால் நாம் நிம்மதியாகவும் வலிமையாகவும் வாழ அவர்கள் துனையிருப்பார்கள்.
நம் தமிழ் சமூகம் இயல்பாகவே வீரியமுள்ள சமூகம்தான் அதை வலுவிழக்க வைக்கத்தான் இத்தனை வழிபாடுகள்.
ஏன் ஐப்பசி மாதங்களில் ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் இருக்க சொல்கிறார்கள் என்பதையும் இதனுடன் இணைத்துப் பாருங்க உண்மை புரியும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.