03/11/2021

சப்தமே இல்லாமல் நசுக்கப்பட்ட தமிழ் சமூகம்.. திட்டமிட்ட கழுத்தறுப்பு...

 


மறைமலை அடிகள் என்று நாம் பெருமிதம் கூறும் சமயம் அதற்க்கு முன்பே ஒருவர் வாழ்ந்து வந்துள்ளார்..

இவரது காலகட்டத்தில் சமஸ்கிரதம் தான் உண்மையான மொழி எனவும் இதிலிருந்து தான் தமிழ் மொழி காப்பியடிக்கப்பட்டது என்று பெருவாரியாக தமிழகம் முழுவதும் பிராமணர்களால் பரப்பப்பட்டது..

இதனை எதிர்ப்பவர்கள் சப்தமே இல்லாமல் காணாமல் ஆக்கப்பட்டார் அல்லது மிரட்டப்பட்டார்கள்.. இதனை தைரியத்துடன் எதிர்த்து பதிலடி கொடுத்த ஒருவர் தான் பங்காரு பக்தர்..

தமிழ் அறிஞரும் ஆசிரியருமான இவர் புதுச்சேரியை சேர்த்தவர்.. [பாரதிதாசனின் ஆசிரியரும் இவரே]..

1913 இல் கலைமகள் என்ற இதழை உருவாக்கினார். இதன் நோக்கம் சமஸ்கிரத்தில் இருந்து தான் தமிழ் உருவானது என்ற பொய்யான பிராமணர்களின் பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்கவே..

இதன் அடுத்தகட்டமாக தமிழில் உள்ள சமஸ்கிரத வார்த்தைகளை தொகுத்து எடுத்து தூக்கி வீசவேண்டும் எனவும் எழுதினார்..

இந்த ஸ்ரீ சேஷ , சாஸ்திரி  ஸ்திரி , இப்படி பல வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்று தொகுத்தார்..

இதன் பிறகு கலைமகள் கழகம் என்ற ஒன்றை உருவாக்கினார்...

அதற்க்கு பிறகு இந்த பத்திரிக்கை என்ன ஆனது ? என்ற விபரம் யாருக்குமே தெரியவில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.