03/11/2021

மறக்கடிக்கப்பட்ட_மனிதர்கள்...

 


1920 நவம்பர் மாதம் நடந்த மதராஸ் மாகாண தேர்தலில் டாக்டர் முஹம்மது உஸ்மான் சாஹிப் நீதி கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்..

அன்றைய முஸ்லிகளுக்கான ஒதுக்கப்பட்ட 14 தொகுதிகளில் நீதிக்கட்சி சார்பில் 5 பேரும் முஸ்லீம் லீக்கினர் ஒன்பது பேரும் வெற்றி பெற்றனர்...

அன்றைய ஆங்கிலேய நிர்வாகத்தால் கவர்னரின் நேரடி பொறுப்பில் ஒரு நிர்வாக குழு அமைக்கப்பட்டது..

உள்துறை நிதித்துறை சட்டத்துறை வருவாய்த்துறை.. இதில் வருவாய்துறையை நிர்வாகித்தவர் ஹபிபுல்லாஹ் சாஹிப்..

இதில் இந்தியாவின் வருவாயை சிறப்பாக கையாண்டதற்காக பெரிதும் பாராட்டு பெற்றவர்..

வேலூர் நகராட்சி தலைவர்.. வட ஆற்காடு மாவட்ட ஆட்சி தலைவர் மற்றுமின்றி திருவாங்கூர் திவானாகவும் இருந்தவர்.. 

இவர் மரணித்தவுடன் இவரை போற்றும் விதமாக..

இவர் பெயரை சென்னையின் முக்கியமாக தெருவான தி நகர் பகுதியில் உள்ள அபிபுல்லாஹ் ரோடு இவர் பெயரிலையே இன்றும் அழைக்கப்படுகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.