14/04/2017

சித்தர் ஆவது எப்படி - 15...


வேறு ஒன்றும் தோன்றா நிலை...

தோன்றா நிலையில் அனுபவப் பட்ட நாம், அந்த தோன்றா நிலையில் நாம் நம் கடமைகளை செய்ய வில்லையென்றால் அந்த தோன்றா நிலை பெற்றதின் மூலம் எந்த பயனையும் அடைவதில்லை..

அந்த தோன்றா நிலையில் ஒரு காரியத்தை செய்தால், அந்த தோன்றா நிலை கெட்டு தானே போகும் என்ற ஒரு கேள்வி எழலாம்..

ஒரு காரியத்தை செய்ய மனம் தேவைப் படுகிறது.. தோன்றும் நிலையில் உள்ள மனம், நிச்சயமாக தோன்றா நிலையை பாதிக்கவே செய்யும்.. உண்மை தான்..

ஆனால் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று உள்ளது..

உணவு உண்டு கொண்டு இருக்கிறோம்.. அது மனம் தன்னை ஈடுபடுத்தி அந்த காரியத்தை செய்ய தொடங்குகிறது.. இப்பொழுது அந்த மனம் அந்த உணவு உண்ணும் காலத்தில் சித்தத்தின் எண்ண ஆதிக்கத்தால் அந்த உணவில் தன்னை முழுமையாக ஈடு படுத்திக் கொள்வதில்லை...

அதனால் அந்த உணவில் உள்ள உணர்வு மிக மிக குறைந்து, அந்த உணர்வின் மூலம் பெற வேண்டிய கனலை பெற முடியாமல் போய் உண்கின்ற அந்த உணவு நாசம் ஆகிறது..

ஒரு தோராயமான கணக்கில் பார்த்தால் அந்த உணவில் நூறில் ஒரு பங்கே நாம் கனலை பெறுகிறோம் என்பது மிக மிக ஆச்சரியமான விசயம் மட்டும் அல்ல, மிக மிக உண்மையான விசயமும் கூட...

நாம் வாழ்வில் பாடுபட்டு சேர்த்ததை எப்படி யெல்லாம் விரையம் செய்கிறோம் என்பதை அந்த தோன்றா நிலை அனுபவத்தின் மூலம் நமக்கு நன்கு விளங்க வரும்...

அந்த தோன்றா நிலை அனுபவத்தை பெற்றபின், நாம் உணவு உட்கொள்ளும் போது, அந்த ஒரு செயலை தவிர வேறு ஒன்றும் தோன்றா நிலையில், அந்த உணவினை உட்கொள்ள வேண்டும்..

வேறு ஒன்றும் தோன்றா நிலையில் நாம் அந்த உணவினை உட் கொள்ளும் போது, அந்த உணவில் நூற்றுக்கு நூறு பங்கு கனலை பெற்று, நாம் வலிமை உடையவர்கள் ஆகிறோம்..

இதை விட மிக உயர்ந்த சிறப்பு எங்கு இருக்கிறது ?

நாம் கடினப் பட்டு ஈட்டிய பொருள்களில் உச்ச கட்ட பயனை பெறுகிறோம்..

மேலும் மேலும் பொருள் ஈட்டவேண்டிய அவசியம் இல்லாமல் போய் விடுகிறது..

ஒரு எளிமையான வாழ்க்கையில் ஒரு பெரிய சக்கரவர்த்தியை விட மிக அதிகமான பயன் தூய்ப்பை பெற்று நமது தேடுதல்கள் அறவே நின்று போய் விடுகிறது...

அந்த தோன்றா நிலை அனுபவத்தை தோன்றும் நிலை ஒன்றில் இணைத்து அந்த தோன்றும் நிலை ஒன்றை தவிர வேறு ஒன்றும் தோன்றா நிலையில் செயல் படும் போது அந்த செயல் சித்தி பெறுகிறது..

சித்தி என்பது பூரணத்துவம் என்பதாகும்..

இப்படியாக செய்கின்ற காரியங்கள் எல்லாம் சித்தி பெறுவதால், ஒரு மனிதன் சித்தர் ஆகிறான்.. சித்தர்கள் செய்கின்ற காரியங்கள் எல்லாம் பூரணத்துவமாக இருக்கும்..

சகலமும் சித்தி பெறும் என்பது இப்படி வேறு ஒன்றும் தோன்றா நிலையில் செய்யும் போது மட்டுமே..

இப்படி தோன்றா நிலை அனுபவத்தை தோன்றும் நிலையோடு பொருத்தி வேறு ஒன்றும் தோன்றா நிலையோடு செயல் படுவதையே அன்பு என்கிறோம்..

தோன்றா நிலையாகிய அருள் சக்தியான அகரமும், தோன்றும் நிலையான புவியின் உலகியல் ஒரு செயலும் பு என்ற எழுத்தும் வேறு ஒன்றும் தோன்றா நிலையாகியாகிய ஒரே முடிவான ஒன்றான ன் என்ற கடைசி மெய் எழுத்தானது இணைந்து அன்பு ஆனாது..

இதில் பதினெட்டாம் மெய் எழுத்தான  ன்  என்பதுதான் மிகவும் முக்கியமானதாகும்..

அதுவே வேறு ஒன்றும் தோன்றா நிலையில் ஒரு செயலை ஒரே முடிவாக வைத்துக் கொண்டு அந்த செயலை சித்தி அதாவது பூரணத்துவம் அடையும் வண்ணம் ஆற்றலை தரவல்லது..

சகலமும் சித்தி பெற ஒரு தகுந்த உபாயத்தை அறிந்த நாம் தோன்றா நிலை அனுபவத்தின் அவசியத்தை உணர்ந்து வாசிப் பயிற்சியிலே கற்றுக் கொண்டதை நடை முறைக்கு கொண்டு வந்து சகலத்தையும் சித்தி பெற செய்து சித்தராவோமாக...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.