23/04/2017

தினமும் 3ஜிபி டேட்டா ரூ.333 மட்டுமே: பி.எஸ்.என்.எல். அதிரடி...


பி.எஸ்.என்.எல் அறிவித்துள்ள புதிய திட்டத்தின் படி வாடிக்கையாளர்களுக்கு தினமும் 3ஜிபி டேட்டா ரூ.333 என்ற விலைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் சலுகைகளை இங்கு பார்ப்போம்.

ரிலையன்ஸ் ஜியோவின் டண் டணா டண் சலுகைக்கு போட்டியாக பல்வேறு நிறுவனங்களை தொடர்ந்து பி.எஸ்.என்.எல். நிறுவனமும் புதிய சலுகையை அறிவித்துள்ளது. பி.எஸ்.என்.எல்-இன் STV349, STV333 மற்றும் STV395 புதிய திட்டங்களின் படி கூடுதல் டேட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பி.எஸ்.என்.எல் STV339 திட்டத்தின் படி ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 2ஜிபி டேட்டாவிற்கு பதில் தினமும் 3ஜிபி டேட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் வாய்ஸ் காலிங் சலுகைகளும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

மற்றொரு திட்டத்தின் கீழ் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளுடன் தினமும் 2 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ.349 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் ரூ.333 திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா 90 நாட்கள் வேலிடிட்டியுன் வழங்கப்படுகின்றது.

பி.எஸ்.என்.எல் ரூ.395 திட்டத்தின் கீழ் தினமும் 2ஜிபி டேட்டா மற்றும் 3000 நிமிடங்களுக்கு பி.எஸ்.என்.எல் அழைப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மற்ற நெட்வொர்க்களுக்கு 1800 நிமிடங்களுக்கான வாய்ஸ் கால்களும் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 71 நாட்கள் ஆகும்.

புதுப்பிக்கப்பட்ட பி.எஸ்.என்.எல் திட்டங்களில் வழங்கப்படும் டேட்டா சலுகைகள் நிறைவுற்றதும் டேட்டா வேகம் 80 Kbps-யாக குறைந்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.