16/04/2017

60 கோடியில் கட்டப்பட்ட பங்களா.. மரணம் துரத்தும் அபாயம், உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடும் முதலமைச்சர்...


அருணாச்சல பிரதேச மாநிலத்தில் அரசு சார்பில் முதலமைச்சர்கள் தங்குவதற்காக  ரூ.60 கோடியில் மிகப் பெரிய சொகுசு பங்களா கட்டப்பட்டது.
இந்த பங்களா உயிர் பழி வாங்கி வருகிறது.

இதனால் முதல்வராக வருபவர்கள் யாரும் இந்த பங்களாவை தவிர்த்து. பங்களா இருக்கும் திசைக்கு கும்பிடுப் போட்டு, உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடும் நிலை உருவாகியுள்ளது.

அந்த பங்களா தற்போது விருந்தினர் மாளிகையாக மாற்றப்பட்டுள்ளது. இருந்த போதிலும் அந்த பங்களாவில் தங்குவதை விவரம் அறிந்தவர்கள் தவிர்த்து வருகின்றனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு 60 கோடி செலவில் இந்த பங்களாவை முதல்வர் டோர்ஜி கந்து கட்டினார். இவர்தான் அந்த பங்களாவில் முதலில் குடியேறினார்.

இவர், கடந்த 2011 ஆம் ஆண்டு விமான விபத்தில் இறந்துபோனார்.

இவருக்கு அடுத்தபடியாக, முதல்வராக வந்தவர் ஜார்போம் காம்லின், இவரும் நீண்டகாலம் அங்கு இருக்க முடியவில்லை, திடீர்  உடல்நலக்குறைவு ஏற்பட்டு மர்மமான முறையில்   இறந்துபோனார்.

மேலும், பொறுப்பு முதல்வராக இருந்த கலிகோ புல் என்பவரும் கடந்த 2006 ஆம் ஆண்டு தூக்கு அதே பங்களாவில் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதன்பின்னர், அந்த பங்களாவில் பணியாற்றிய அரசு ஊழியரும் அங்கிருந்த ஒரு அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இப்படி, தொடர்ந்து இவ்வாறு நடந்து வந்த மரணங்கள் காரணமாக அங்கு பேய் உலாவுவதாக கருத்து நிலவி வந்தது.

இதனால் முதல்வர்கள் அங்க தங்குவதை தவிர்த்து, உயிருக்கு பயந்து ஓடிவிடுகின்றனர்.

இதனையடுத்து, அந்த பங்களாவை தற்போது விருந்தினர் மாளிகையாக அரசு மாற்றியது. இருந்தும் இந்த பங்களாவில் தங்குவதை விருந்தினரும் தவிர்த்து வருகின்றனர்.

இன்னும் எத்தனைப் பேரை இந்த பங்களா காவு வாங்குமோ என்கிற பயத்தில் அந்த பகுதி மக்கள் உள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.