07/04/2017

கன்னட பலிஜா ஈ.வே. ராமசாமி நாயூடு வைப் பற்றி ப. ஜீவனாந்தம்...


ஈ.வே. ராமசாமி நாயூடு வின் முரண் பாடுகளை கம்யூனிஸ்ட் வாதியான ப. ஜீவானந்தம் தோலுரித்துக் காட்டகிறார். இதோ..

1. ஈரோட்டில் சமதர்ம வேலைத் தீர்மானத்தை நிறைவேற்றினார். பின்னர் சமதர்ம விரோதிகளான ஆர். கே. சண்முகம், ஏ. ராமசாமி முதலியார்களைத் தேர்தலில் ஆதரித்தார் ஈ.வே. ரா.

2. சுயமரியாதை இயக்கத்தின் அரசியலுக்காக சமதர்மக் கட்சி வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றி விட்டு ஜஸ்டிஸ் கட்சிக்குத் திரும்பவும் ஓடினார் ஈ.வே. ரா.

3. ஜமீன்தார் – அல்லாதார் மகாநாடு கூட்டி, பொப்பிலி முதல் எல்லா ஜமீன்தாரிகளும் ஒழிய வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, பொப்பிலி அரசர் சிறந்த சமதர்ம வீரர் என்று பாராட்டி, பொப்பிலி தலைமையைப் புகழ்ந்தார் ஈ.வே. ரா.

4. லேவாதேவிக்காரர் – அல்லாதார் மாநாடு கூட்டி, லேவாதேவிக் காரர்களெல்லாம் ஓழிய வேண்டுமென்று சரமாரியாகச் சொன்மாரி பொழிந்து தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, குமார ராஜா முத்தையா செட்டியாரோடு கொஞ்சிக்குலாவினார் ஈ.வே. ரா.

5. மதங்களெல்லாம் ஒழிய வேண்டுமென்று விருதுநகர் மாகாகண சுயமரியாதை மகாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, இஸ்லாம் மார்க்கம் நல்லதென்றும் அதில் தாழ்த்தப்பட்ட மக்கள் சேருங்கள் என்று பிரசாரம் செய்தார் ஈ.வே. ரா.

(நூல் : ஈரோட்டுப் பாதை சரியா).

இதுபோன்ற முன்னுக்குப்பின் முரணான வகையில் நடந்துக் கொள்வதும்..

முன்னுக்குப்பின் முரணான வகையில் பேசுவதும்...

வரலாற்றைத் திரித்துக் கூறுவதிலும் ஈ.வே. ராமசாமி நாயூடு விற்க்கு நிகர் ஈ.வே. ராமசாமி நாயூடு தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.