08/04/2017

இலுமினாட்டி கள் ஏன் மதங்களை அழிக்க வேண்டும்?


மனிதனைப் பொறுத்த வரை அவன் வாழ எப்போதும் அவனுக்கு அறிவுறுத்தல் தேவைப்படுகிறது. இது தான் மனித சைகொலோஜி.

அப்படித்தான் மனிதன் படைக்கப்பட்டுள்ளான். அவன் பிறந்தது முதல் சிறுபிராயம், இளமை, இறப்பு வரை தகவல்கள் வாங்கப்பட்டு அவை தான் அவனை இயக்குகிறது.

பிறக்கும் போது மனிதன் வெறும் Processor ரோடு மட்டுமே பிறக்கிறான். Data இல்லாமல் Processor இருந்து பயன் இல்லை. ஐம் புலன்களாலும் data அவனால் சேகரிக்கப்பட்டு உள்ளே Process பண்ணப்பட்டு அவைதான் அவனை வாழச் செய்கிறது. நன்மை தீமை போன்றவையும் இப்படியே. அதற்கும் வழிகாட்டல் வேண்டும் என்பது தான் மனித உளவியல்.

படைத்த இறைவனுக்குத்தான் மிகச் சரியான தகவலை சொல்லித்தர முடியும். உலகத்திலும் மறுமையிலும் வெற்றி பெறும் மொத்தத் தகவலையும் கடவுள் தான் கொடுத்துள்ளான்.

மிகச்சரியான தகவலை மனிதனுக்கு வழங்கி அவனை இரு உலகிலும் வெற்றி பெற வைப்பதே கடவுளின் நோக்கம்.

இதனால் தான் ஆதமுக்கு உலக விடயங்களையும் இறைவன் கற்றுக் கொடுத்தான், மறுமைக்கான விடயங்களையும் கற்றுக் கொடுத்தான். எனவே மனிதன் கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டியவனாக மாறுகிறான்.

இந்த இடத்தை ஷைத்தான் அடைய வேண்டும் என்றால் கடவுள் கொடுத்த தகவல் அழிக்கப்பட வேண்டும். வழி இன்றி மனிதன் இருளில் தவிக்கும் போது சைத்தான் தன் வழியைக் காட்டுவான்.

ஏதாவது ஒன்றைப் பின்பற்ற வேண்டும் என்ற மனித இயல்பு சைத்தானின் வழியைப் பின்பற்றத் தொடங்குகிறது. வழிகெடுப்பேன் என்று அல்லாஹ்விடம் சைத்தான் விட்ட சவாலை ஷைத்தான் செய்யும் முறை இதுதான்.

காலத்துக்குக் காலம் நபிமார்களை அனுப்பி அல்லாஹ் வேதம் வழங்குவதும் அதை ஷைத்தானியக் கூட்டம் அழிப்பதும் மீண்டும் அல்லாஹ் வழங்குவதும் என வரலாற்றில் மாறி மாறி நடந்துள்ளது.

இறுதி வேதம் என்று வந்த குரானையும் இதே போன்று இவர்கள் அழிக்க முற்பட்டனர். ஆனால் இது இறுதி வேதம் என்பதால் அல்லாஹ் இதைப் பாதுகாத்தான். அல்லாஹ் கடைசி வேதத்தைப் பாதுகாத்த முறைதான் ஆச்சரியமானது.

பித்அத்தையும், இணைவைப்பையும், குப்ரையும் வர முடியாமல் செய்து அல்லாஹ் பாதுகாக்கவில்லை. பித்அத்தும், ஷிர்க்கும், குப்ரும் இருக்கும் நிலையிலேயே அதை சத்தியத்தில் இருந்து வேறாக்கி அற்புதமாக அவன் வாக்களித்த படி பாதுகாத்தான்.

அதாவது எவனெல்லாம் சைத்தானுக்கு நேரடி எதிரியோ, எவன் தூய வஹிப்படி வாழ்கிறானோ அவன் பித்அத், ஷிர்க், குப்ர் என்பதை உயிரைக் கொடுத்து எதிர்ப்பான். நபிகளாரின் மிகச் சிறிய சுன்னா என்றாலும் அதை மிகப்பெரிய விடயமாகக் கருதி அதை பரப்ப முயற்சிப்பான். சிறிய விடயம் தானே என்று சைத்தான் கால்வைக்கும் முதல் படியை பாதுகாக்க தன் உயிரை இழக்கவும் தயங்கமாட்டான்.

ஷிர்க், பித்அத் இதற்கெதிரான போராட்டமே வஹியைப் பாதுகாக்கும், சைத்தானை எதிர்க்கும் கூட்டத்தின் ஆணிவேராக இருக்கும். (இறுதியில் தாஜ்ஜாளோடு போரிடப் போகும் கூட்டமும் இவர்களே. இதை முழுமையாக கடைசியாக பார்க்க இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ்). ஏன் எனில் இந்தக் கடைசி வேதம் அதற்கு அந்த அளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

நபிகளார் தொடக்கம் நபிகளாருக்குப் பின் வரலாறு நெடுகிலும் தூய சத்தியம் அசத்தியத்தோடு கலந்ததே இல்லை. அசத்தியத்திலும் கூட பல வகை உண்டு. முற்றாக வழிகெட்ட கூட்டம் என்பது ஒரு வகை. வழிகெட்டிருந்தாலும் கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்லும் அளவுள்ள கூட்டம். சத்தியத்திற்கு கொஞ்சம் நெருக்கமானது என்று சொல்லத்தக்க வழிகெட்ட கூட்டம் என பல வகை உண்டு.

சத்தியத்தோடு நெருக்கமான கொள்கைகள் யாரோடாவது சேர்வதாக இருந்தால் சத்தியக் கொள்கையுடன் தான் சேர வேண்டும். ஆனால் அப்படி நடப்பதில்லை. தூய சத்தியம் தவிர அனைத்தும் ஒன்று சேர்ந்து தான் சத்தியம் எதிக்கப்படும் என்பதை இன்றுகூட காணலாம்.

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில் கூட சத்தியக் கூட்டம் அசத்தியத்தோடு கொள்கையில் சேராது. செத்துப் போனாலும் அது தனித்துத் தான் சாகும்.

இதற்கு முழுக்காரணம் தூய கடைசி வேதத்தை தூய்மையாகப் பாதுகாக்கத் தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.