30/04/2017

அமெரிக்காவில் ஸ்ரீ யந்திரம்...


அமெரிக்காவில் ஒரிகான் மாகாணத்தில்  உள்ள ஒரு காய்ந்த ஏரி படுகையில் பறந்த விமானி ஒருவரால் 1990-ல் கண்டுபிடிக்க பட்டது இந்த அமைப்பு...

இந்த அமைப்பின் மொத்த நீளம் 21.404 (13.3 Miles) கிலோ மீட்டர்கள்.இதன் கோடுகள் 10 inch அகலமும், 3 inch ஆழமும் கொண்டவை.

இதை வானத்தில் இருந்து மட்டுமே பார்க்க முடியும். இந்த பகுதியில் அடிக்கடி சிறிய ரக விமானங்கள் பறப்பது வழக்கம்..

ஆனால் அது வரை யாரும் இது குறித்து தெரிவிக்காததிலிருந்து இது மிக சமீபத்தில் உருவாக்கப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இது நூறு  சதவீதம் இந்துகளால் மிக சக்தி வாய்ந்ததாக கருதி பூஜிக்க படும் ஸ்ரீ யந்திரத்தை ஒத்து இருக்கிறது..

இந்த கண்டுபிடிப்பு பத்திரிகைகளில் வெளிவந்த போது இதை தாங்கள் தான் உருவாக்கியதாக நான்கு பேர் தெரிவித்தனர்.

அவர்களை அந்த இடத்திற்கு அழைத்து சென்று அந்த அமைப்பை போல செய்ய சொன்னதற்கு அவர்களால் 1/4 inch கூட தோண்ட முடியவில்லை..

காரணம் அந்த அளவிற்கு கடினமானது அந்த தரையின் உள் பகுதி..

மேலும் அந்த இடத்திற்கு ஆராய்ச்சியாளர்கள் வந்த பின் அவர்களின் வாகன தடங்கள் தரையில் தெரிந்தன..

ஆனால் அதற்கு முன் எந்த வாகன தடங்களும் இல்லை. எனவே இது மனிதர்களால் உருவாக்க பட்டதல்ல என்றால் வேறு யார்..?

ஆதாரம் :

http://www.labyrinthina.com/sriyantra.htm

http://en.wikipedia.org/wiki/Sri_Yantra

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.