16/05/2017

புதிய வில்லன் ரேன்சம்வேர்...


உலகை அச்சுறுத்த கிளம்பி இருக்கும் புதிய... நவீன.... நூதன... சாப்ட்வேர் கொள்ளைகார  வில்லன் தான் (ransomeware ) ரேன்சமவேர்.

அந்த கொள்ளைக்கு பெயர் (wanna cry).

கடந்த சில நாட்களில் இது கொள்ளை அடித்து இருக்கும் நாடுகள் 100 க்கும் மேல். பாதிக்க பட்ட கணினி லட்சத்துக்கும் மேல். உஷார் அடுத்து உங்கள் கணினியாக இருக்கலாம். அதுவும் நீங்கள் பசை உள்ள பார்ட்டி யாக இருக்கும் பட்சத்தில் எச்சரிக்கை இரு மடங்கு அவசியம். காரணம் ரென்சம்வேர் குறி வைப்பது பெரிய பெரிய நிறுவனங்கள்.. பணக்கார இடங்கள் மருத்துவ மனைகள் குறிப்பாக மிக முக்கியமான பைல்கள் கொண்ட இடங்கள்.


அது என்ன ரேன்சம்வேர் ?

அது ஒரு சாப்ட்வெர்.... வழக்கமான கணினி வைரஸ்  போல தான் ஆனால் வழக்கத்தை விட அதிக ஆபத்தானது (சாதா வைரசுக்கும் HIV வைரசுக்கும் உள்ள வித்தியாசம் போல்). இப்படி ஒரு உலக தரமான திருடன் உருவானது எப்படி அப்படி ஒரு கில்லாடி சாபட்வேர் உருவாக்கியது யார் தெரியுமா?

அமேரிக்கா வின் NSA.. அதாவது நேஷனல் செக்யூரிட்டி ஏஜென்சி தனது நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் சில இடங்களில் கம்பியுடரை ஹேக் செய்வதற்காக உருவாக்க பட்ட சாப்ட்வெர் அது.  அந்த மென்பொருள் எங்கோ வெளியே கசிந்து யார் கையிலோ கிடைத்தது தான் ஆபத்தின் ஆரம்பம். (அல்லது அமெரிக்கா வேண்டுமென்றே கசிய விட்டதா என்று அந்த அமெரிக்காவுக்கும் ஆண்டவனுக்கும் தான் தெரியும்)..


அது முதலில் வழக்கம் போல் ஒரு மெயில் போல தான் வரும். ஏதோ ஒரு வங்கியின் பெயரிலும் வரலாம். அதை திறந்து விட்டால் அது திறந்து விடும் ஆனால் அதை தவிர மற்ற அனைத்தும் மூடி விடும்.

அதாவது அந்த சர்வரில் உள்ள மொத்த பைல் களையும் அது லாக் செய்து அதை அதற்க்கு சொந்தமான பயனாளர்கள் பயன் படுத்த முடியாத படி பண்ணி விடும். அப்போது நீங்கள் முழித்து கொண்டு இருக்கும் போது திடீர் என்று ஒரு பாப் அப் மெசேஜ் வரும்..

இவ்வளவு பணத்தை நான் சொல்லும் இடத்தில செலுத்தினால் தான் உங்கள் பைல்களை மீண்டும் திறக்க முடியும் என்று.

அப்படி கேட்க படும் கட்டணம் பிட் காயின் என்கிற VIRTUAL MONY முறையில் இருக்கும். ஒரு பிட் காயின் மதிப்பு கிட்ட தட்ட 1800 டாலர். நம்ம ஊரு காசுக்கு கிட்ட தட்ட ஒன்றரை லட்சம் ரூபாய்.

இந்த பிட் காயின் விசேஷம் என்ன வென்றால் இதில் அனுப்ப படும் பணம் யாருக்கு போய் சேருகிறது என்பதை கண்டு பிடிக்க முடியாது.


உலகம் முழுதும் அச்சுறுத்தி கொண்டு இருக்கும் இந்த ரென்சம்வேர் இடம் இதற்க்கு மேல் இன்னொரு கொடூரம் உண்டு என்பது தான் உச்சம்.

காக்க காக்க படத்தில் கடத்த பட்ட குழந்தைக்கு பணம் கேட்பான் வில்லன். கேட்ட பணத்தை கொடுத்த பின்பும் குழந்தைகளை கொன்று கொண்டு வந்து போட்டு விட்டு போவான்.

ரென்சம்வேர் அப்படி ஒரு வில்லன் தான்.

அதாவது அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்து விட்டாலும் அந்த பைல்கள் திரும்ப கிடைக்கும் வாய்ப்பு மிக மிக குறைவு.

தப்பிக்க என்ன எச்சரிக்கை மேற்கொள்ள வேண்டும்...?

முதலில் முன் பின் தெரியாத மெயிலை கொஞ்ச நாளைக்கு திறக்காதீர்கள்.

நல்ல தரமான ஆன்ட்டி வைரஸ் சாப்ட்வெர் பயன் படுத்துங்கள்.

மறக்காமல் அதை அப்டேட் செய்யுங்கள்.

பெண் ட்ரைவ் போன்ற சாதனங்கள் இணைக்கும் முன் நன்றாக ஸ்கேன் செயுங்கள். பாதிப்பு இருப்பது தெரிந்தால் மற்ற தொடர்புக்கு பரவாத படி உடனே துண்டியுங்கள்.

சுருக்கமா சொல்லனும்னா மாட்டின்னா பிறகு தப்பிப்பது கடினம்.

தொழில் நுட்பம் முன்னேற்றம் அடைய அடைய புதிய புதிய நூதன வில்லன்கள்
புதிய வகை கிரைம் தோன்றுவது தவிர்க்க முடியாது. நாம்  இரு மடங்கு எச்சரிக்கை யோடு இருப்பது அத்தியாவசியமானது...

விரிவான தகவலுக்கு sorce :

What is Ransomware and 15 Easy Steps To Keep Your System Protected [Updated] - Heimdal Security Blog https://www.google.co.in/amp/s/heimdalsecurity.com/blog/what-is-ransomware-protection/amp/

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.